உள்ளாட்சி தேர்தல்; திமுக கூட்டணிக்கு வன்னியர் கூட்டமைப்பு ஆதரவு!

 

உள்ளாட்சி தேர்தல்; திமுக கூட்டணிக்கு வன்னியர் கூட்டமைப்பு ஆதரவு!

9 மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என் ராமமூர்த்தி அறிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்; திமுக கூட்டணிக்கு வன்னியர் கூட்டமைப்பு ஆதரவு!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் மிகப் பெரும்பான்மையாக இருக்கும் வன்னிய மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் நடந்து முடிந்த சட்டசபை பொதுத் தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றிக்காக பாடுபட்ட வன்னியர் சமூகத்தில் உள்ள ஒரே அமைப்பு வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி மட்டுமே தனது முழு ஆதரவை தெரிவித்து தமிழகத்தில் பரவலாக பிரச்சாரம் செய்து திமுக கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு துணை நின்றது. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி முழு ஆதரவு தெரிவிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்; திமுக கூட்டணிக்கு வன்னியர் கூட்டமைப்பு ஆதரவு!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்.6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, கூட்டணியை விட்டு விலகி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. தேமுதிகவும் தனித்துப் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் இதுவரை விலகவில்லை. சட்டமன்றத் தேர்தலில் இருந்த அதே கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், திமுக கூட்டணிக்கு கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக வன்னியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.