திரிணாமுல் காங்கிரசில் ஏன் இணைந்தேன்?.. மனம் திறந்த முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்

 
மம்தா பானர்ஜி, லியாண்டர் பயஸ்

கோவாவை ஜொலிக்க வைக்கும் என்பதால்தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் நான் இணைந்தேன் என்று முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் தெரிவித்தார்.

பிரபலமான முன்னாள் டென்னிஸ் விளையாட்டு வீரரான லியாண்டர் பயஸ் கடந்த மாதம் யாரும் எதிர்பாராத வண்ணம் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.  தற்போது கோவாவில் லியாண்டர் பயஸ் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சாமானிய மக்களை சந்தித்து பேசி வருகிறார். கோவா சட்டப்பேரவை தேர்தலில்  லியாண்டர் பயஸ் போட்டியிடுவார் என்றும், திரிணாமுல் காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் அவர்தான் என்றும் பல்வேறு யூக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் லியாண்டர் பயஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது தன்னை குறித்த யூக செய்திகளுக்கு தயக்கம் இல்லாமல் பதில் அளித்தார். லியாண்டர் பயஸ் கூறியதாவது: நான் 30 ஆண்டுகளாக இந்தியாவை (டென்னிஸ் விளையாட்டில்) பிரதிநிதித்துவப் படுத்தியிருக்கிறேன். நான் இப்போது எனது தளத்தை (அரசியல்) மாற்றியிருக்கிறேன். 

கோவா

ஆனால் டென்னிஸ் மைதானத்தில் நான் முன்பு இருந்த அதே கடின உழைப்பை மக்கள் மன்றத்திலும் செய்கிறேன். மக்களுக்கு சிறந்த தரமான வாழ்க்கையை வழங்க விரும்புகிறேன். அதற்கு சமூக நல்லிணக்கமும், அமைதியும் அவசியம். எனக்கு எல்லா இடங்களிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் ஏன் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தேன் என்பதை நீங்கள் யதார்த்தமாக பார்த்தால், அந்த கட்சி கோவாவை ஜொலிக்க வைக்கும் என்பதால்தான். சிங்கப்பூர் போன்ற நல்லாட்சியை கோவாவை உதாரணமாக கொள்ளலாம். கோவாவுக்கு நல்ல முறையான நிர்வாகம் தேவை, அதை திரிணாமுல் காங்கிரசால் முடியும் என்று நினைக்கிறேன். 

திரிணாமுல் காங்கிரஸ்

கோவா கோவான்களுக்கு என்பது காலத்தின் தேவை. கோவாவுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உண்மையான ஆர்வம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது. மக்களுக்கு சேவை செய்ய எனக்கு (தேர்தலில் போட்டியிட) வாய்ப்பு  கிடைத்தால் அது மிகப்பெரிய கவுரமாக இருக்கும். எனக்கு பிளாட்பார்ம் (முதல்வர் பதவி) கொடுத்தால் கடந்த 30 வருடங்களாக நான் உழைத்த அதே உழைப்பில் ஈடுபடுவேன். ஒவ்வொரு பிரச்சினையையும் சீரியஸாக எடுத்துக் கொண்டு, ஒரு குழுவை உருவாக்கி  மூத்தவர்களிடம் ஆலோசனை பெற்று கடினமாக உழைப்பேன். கோவாவை நான் முறையாக ஆட்சி செய்வேன். நமது வளமான வளங்களை எடுத்து தங்க கோவாவை நாம் உருவாக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.