அகிலேஷ் யாதவ் தனது பெயரை அகிலேஷ் அலி ஜின்னா என்று மாற்ற வேண்டும்.. உத்தர பிரதேச துணை முதல்வர் கிண்டல்

 
கே.பி.மவுரியா

அகிலேஷ் யாதவ் தனது பெயரை அகிலேஷ் அலி ஜின்னா என்று மாற்ற வேண்டும்  என்று உத்தர பிரதேச துணை முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கே.பி.மவுரியா கிண்டல் செய்தார்.

உத்தர பிரதேசம் பாரபங்கியில் அம்மாநில துணை முதல்வர் கே.பி.மவுரியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சமாஜ்வாடி கட்சியின் திருப்திப்படுத்தும் அரசியல் ஜின்னாவை கொண்டு வந்துள்ளது. அதனால்தான் அகிலேஷ் யாதவ் தனது பெயரை அகிலேஷ் அலி ஜின்னா என்று மாற்ற வேண்டும் என்று கூறுகிறேன். மேலும் அவர் தனது கட்சி பெயரையும் ஜின்னாவாடி கட்சி என்று மாற்ற வேண்டும்.

அகிலேஷ் யாதவ்

இந்த தேர்தலில் அகிலேஷ் யாதவுக்கு முகமது அலி ஜின்னாவோ அல்லது அதிக் அகமதுவோ அல்லது முக்தர் அன்சாரியோ உதவ முடியாது. உத்தர பிரதேசத்தில் மக்கள் தாமரையை (பா.ஜ.க.) தேர்ந்தெடுத்துள்ளனர். நேர்மையுடன் மாநில மக்களை சென்றடைவதே நன்மை. இங்கு மாபியா மற்றும் குண்டர்கள் இருந்தனர், அவை முடிவுக்கு வந்து மக்கள் நிம்மதியாக உள்ளனர்.

சமாஜ்வாடி

சமாஜ்வாடி கட்சி பீதியில் உள்ளது, அவர்கள் 3 தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளனர். நான்காவது தேர்தலில் தோற்கப்போகிறார்கள். சாவடி வரை பரவியிருக்கும் ஒரு அமைப்பு எங்களிடம் இருப்பதால் அடிப்படை யதார்தத்தை நாங்கள் அறிவோம். ஆனால் சமாஜ்வாடி கட்சிக்கும் தெரியும், தங்களிடம் குண்டர்கள், குற்றவாளிகள் மற்றும் மாபியாக்கள் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.