‘திமுக’ பக்கம் சாய்ந்த கருணாஸ்.. பரபரப்பு கடிதம்!

 

‘திமுக’ பக்கம் சாய்ந்த கருணாஸ்.. பரபரப்பு கடிதம்!

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் சமீபத்தில் சசிகலாவுக்கு ஆதரவு அளித்து பேசி வந்தார். கருணாஸ் சசிகலாவுக்கு பரிந்துரைத்து பேசியது, இரட்டை தலைமையை ஆத்திரமடையச் செய்தது. ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸிடம் இருந்து எப்படியாவது அதிமுகவை மீட்டெடுக்க வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கும் சசிகலாவுக்கு, ஆதரவளிப்பவர்களை அதிமுக புறந்தள்ளிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், கருணாஸை அதிமுக மீண்டும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுமா என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.

‘திமுக’ பக்கம் சாய்ந்த கருணாஸ்.. பரபரப்பு கடிதம்!

முந்திக் கொண்ட கருணாஸ், அதிமுகவில் இருந்து தனது கட்சி விலகுவதாக அதிரடியாக செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். முக்குலத்தோர் புலிப்படையின் கோரிக்கைகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக அரசு புறந்தள்ளிவிட்டது. நம்ப வைத்து எடப்பாடி பழனிசாமி கழுத்தை அறுத்துவிட்டார். 84 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என பேசினார்.

‘திமுக’ பக்கம் சாய்ந்த கருணாஸ்.. பரபரப்பு கடிதம்!

அதிமுகவை எதிர்க்கும் எந்த கட்சியாக இருந்தாலும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளும் திமுக, கருணாஸிடம் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸ் கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கடிதம் ஒன்றை அளித்துள்ளது. முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி செயலாளர் அஜய், ஆதரவு கடிதத்தை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கொடுத்திருக்கிறார். இக்கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.