வஞ்சிக்கும் மத்திய அரசு; தமிழக உரிமைகளை ஸ்டாலின் மீட்டு வர வேண்டும் – கருணாஸ்

 

வஞ்சிக்கும் மத்திய அரசு; தமிழக உரிமைகளை ஸ்டாலின் மீட்டு வர வேண்டும் – கருணாஸ்

தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைக்க முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று டெல்லி சென்றிருக்கிறார். மாலை 5 மணிக்கு மோடியை சந்திக்கிறார். முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் இனிதே அமையட்டும் என பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம் அமையட்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வஞ்சிக்கும் மத்திய அரசு; தமிழக உரிமைகளை ஸ்டாலின் மீட்டு வர வேண்டும் – கருணாஸ்

அந்த அறிக்கையில், கடந்த மே 7-ஆம் தேதி பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தும் அதனை உடனடியாக செயல்படுத்தியும் கொரோனா காலத்தில் மக்கள் மத்தியில் நல்லாட்சிக்கான வரவேற்பையும் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். முதல் முறையாக டெல்லி சென்று பிரதமரை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார். கடந்த அதிமுக அரசால் தமிழர்களின் உரிமைகள் அனைத்தும் பறி போய்விட்டது. புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலின் அதிமுக அரசை போல் மத்திய அரசுக்கு வளைந்து கொடுக்கக் கூடாது.

ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி, செங்கல்பட்டில் கொரனோ தடுப்பூசி மையம் அமைப்பது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின், நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் பிரச்னை, எழுவர் விடுதலை, ஜிஎஸ்டி நிலுவைத்தொகை, கொரோனா சிகிச்சை மருந்து பயன்பாட்டுக் கருவிகள் வரிவிலக்கு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் பேச வேண்டும். தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்காது மீட்டு வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.