“கழுத்தை அறுத்த எடப்பாடி ” கூட்டணியிலிருந்து கருணாஸ் விலகல்!

 

“கழுத்தை அறுத்த எடப்பாடி ” கூட்டணியிலிருந்து கருணாஸ் விலகல்!

அதிமுக கூட்டணியிலிருந்து எம்எல்ஏ கருணாஸ் விலகுவதாக அறிவித்துள்ளார்.

“கழுத்தை அறுத்த எடப்பாடி ” கூட்டணியிலிருந்து கருணாஸ் விலகல்!

2021 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்டவை உள்ளன. ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போதும், மக்களவை தேர்தலின் போதும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி பெயர் எந்த இடத்திலும் அடிபடவில்லை. முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கூட்டணி வைக்க அழைப்பார்கள் என்று நம்பியிருந்த நிலையில் ஏமாற்றமே எஞ்சியது. சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதால் அவருக்கு இடம் வழங்கப்படவில்லையா? என்ற கேள்வி பலரது மனதிலும் இருந்தது.

“கழுத்தை அறுத்த எடப்பாடி ” கூட்டணியிலிருந்து கருணாஸ் விலகல்!

இந்நிலையில் இதுகுறித்து அறிவித்துள்ள முக்குலத்தூர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ், “அதிமுகவில் சசிகலா என்னை அறிமுகப்படுத்திய காரணத்தினால் புறம்தள்ளி விட்டனர். எடப்பாடி பழனிசாமி எங்களை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார். கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம். வன்னியருக்கு இடஒதுக்கீடு தேர்தல் ஆதாயத்திற்காக தந்து மற்ற சமுதாய மக்களிடம் விரோதம் ஏற்படுத்தி கொண்டது அதிமுக. முக்குலத்தோர் கோரிக்கைளை அதிமுக நிறைவேற்றவில்லை” என்றார்.