“தேர்தல் ரேஸில் ஒதுங்கிய கருணாஸ்”; முடிவுக்கு வந்த அலப்பறை!!

 

“தேர்தல் ரேஸில் ஒதுங்கிய கருணாஸ்”; முடிவுக்கு வந்த அலப்பறை!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.

“தேர்தல் ரேஸில் ஒதுங்கிய கருணாஸ்”; முடிவுக்கு வந்த அலப்பறை!!

அதிமுக கூட்டணியில் இருந்த முக்குலத்தோர் புலிப்படை , சட்டமன்ற தேர்தலில் சீட் ஒதுக்காததால் அக்கட்சியிலிருந்து விலகியது. அத்துடன் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும், தங்களை கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. உங்கள் ஆதரவும் வேண்டாம்; கூட்டணியும் வேண்டாம் என திமுக தரப்பில் சொல்ல, அதிருப்தி அடைந்த கருணாஸ், ஆதரவை வாபஸ் பெற்றார்.

“தேர்தல் ரேஸில் ஒதுங்கிய கருணாஸ்”; முடிவுக்கு வந்த அலப்பறை!!

இதுகுறித்து முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெறவிருக்கின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்த அண்ணா திமுகவை நிராகரித்து தோற்கடிக்க முக்குலத்தோர் புலிப்படை சபதமேற்று உள்ளது.இந்த தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை”என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “இங்கு தேர்தலில் திராவிட இயக்கங்களால் அரசியல் அனாதையாக்கப்பட்ட முக்குலத்தோர் சமுதாயம் அதன் இளைஞர்கள் அரசியல் அதிகாரத்தையும் , அரசியலின் தன்மையையும் புரிந்து எதிர்காலத்தில் எவரும் முக்குலத்தோர் அல்லது அரசியல் நிலையை நினைத்து பார்க்க முடியாத படி அரசியல் பணியாற்ற முன்வரவேண்டும். மொத்தத்தில் 2021 சட்டசபை தேர்தலில் புறக்கணிக்கப்பட்ட முக்குலத்தோர் மக்கள் இழந்த மரியாதையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது முக்குலத்தோர் புலிப்படையின் இலக்கு ” என்று குறிப்பிட்டுள்ளார்.