அன்று பின்வரிசைக்கு அனுப்பிய ஜெ., - இன்று மேடைக்கே அழைத்த ஸ்டாலின்

 
vs

இரண்டு நாள் அரசு முறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை சென்றிருக்கிறார்.  முதல்வரின் கோவை வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது .   பாதுகாப்பு காரணம் கருதி இன்றும் நாளையும் கோவை மாநகர எல்லைக்குள் ட்ரோன் கேமரா பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது .

va

இன்று கோவை வ.உ.சி. மைதானத்தில் நடந்த அரசு விழாவில் திட்டப்பணிகளுக்கு  அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிவுற்ற பணிகள் தொடங்கி வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் முன்னாள்  அமைச்சரும்,  தற்போதைய அதிமுக கொறடாவுமான  எஸ்.பி.வேலுமணி கோவை பாஜக  எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.   ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.  பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பங்கேற்றார்.  அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை மேடைக்குக் கீழே இருக்க,  அந்த இருக்கையில் சென்று அவர் அமர்ந்தார்.

 இதை கவனித்த முதல்வர்  சீனிவாசனை மேடையில் வந்து அமருமாறு அழைப்பு விடுத்தார்.  இதை அடுத்து வானதி சீனிவாசனுக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்பட்டு அவர் மேடையில் அமர வைக்கப்பட்டார்.  வானதி சீனிவாசன் இந்த விழாவில் வாழ்த்துரை வழங்கி பேசினார்.

vb

 எதிர்க் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் என்றாலும் அவரை மேடைக்கு அழைத்து அமர வைத்த முதல்வர் ஸ்டாலின் செயலை அரங்கில்  இருந்தவர்கள் பாராட்டினர்.  எதிர்க்கட்சிகளை கண்ணியமான முறையில் நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் என்று அங்கு வந்திருந்த பிற கட்சியினரும் பேசிக்கொண்டனர்.

இன்று எதிர்க்கட்சி எம்எல்ஏவை இப்படி மேலே அமரவைத்து மரியாதை கொடுத்த விதத்தையும் அன்று ஜெயலலிதா ஆட்சியில் ஸ்டாலினுக்கு செய்ததையும் இங்கே பேசிக் கொண்டனர்.  கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற நிகழ்வில் திமுக சட்டமன்ற கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் இதர திமுக எம்எல்ஏக்கள் பின்வரிசையில் அமர்த்தப் பட்டிருந்தனர்.  அவர்கள் முன் வரிசையில் கூட அன்றைக்கு அமர வைக்க படவில்லை.  ஆனால் இன்றைக்கு ஸ்டாலின் எதிர்க்கட்சி எம்எல்ஏவை மேடையிலேயே அழைத்து அமர வைத்து இருக்கிறார் என்று பேசிக்கொண்டார்கள்.