முதல்வர் பங்கேற்கும் விழாவா இது? அதிசயிக்க வைத்த ஸ்டாலின்

 
ச்க்

 முதல்வர் பங்கேற்காமல் நடக்கும் அரசு விழாக்களிலேயே  முதல்வரின் படம் இடம் பெற்றிருக்கும் போது முதலமைச்சர் பங்கேற்ற ஒரு அரசு விழாவில் முதல்வரின் படம் இடம்பெறாதது கண்டு பலரும் அதிசயித்தனர்.  

 கொங்கு மண்டலத்தினை  பலப்படுத்த வேண்டும் அங்கே திமுகவின் வாக்கு வங்கியை அதிகப்படுத்த வேண்டும் என்று அதற்கென மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்திருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.   அவர் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வுக் கூட்டம் நடத்தி மக்களிடம் மனுக்களைப் பெற்று அது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.  

கொ

 இந்த நிலையில் கோவையில் இன்று நடைபெற்ற விழாவிலும் இதை முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் நமக்கு பெருவாரியான வெற்றி கிடைத்திருந்தாலும் கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நாம் நினைத்த அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை.  அதை எல்லாம் இங்கே விரிவாக பேசி இதை அரசியலாக்க நான் தயாராக இல்லை.  காரணம் இது அரசு விழா.  வெற்றி வாய்ப்பை தவறவிட்ட மாவட்டமாக கோவை மாவட்டம் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் நான் பங்கே இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.  அதற்கு காரணம், ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்படுகிறது என்றார் முதல்வர்.

587.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 70 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்தார் முதல்வர்.  89 .73 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 128 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

கோஒ

 முதலமைச்சர் ஒரு மாவட்டத்திற்கு வருகிறார் என்றால் அவரை வரவேற்க பேனர்கள்,  கட் அவுட்டுகள் வைக்கப்படுவது வழக்கம்.  பேனர்கள் மூலமாக ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது திமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தி வந்த முதல்வர் ஸ்டாலின் தற்போதும் முதல்வர் ஆன பின்னரும் அதை அறிவுறுத்த கோவையில் வந்த முதலமைச்சரின் வருகையையொட்டி சாலையில் எங்கும் வரவேற்பு பேனர்கள்,  கட் அவுட்டுகள் எதுவும் வைக்கப்படவில்லை. 

 அதுமட்டுமல்லாமல் அரசு நிகழ்வுகளில் விழா மேடையில் முதலமைச்சர் படமும் இடம் பெறுவது வழக்கம்.  ஆனால் கோவையில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் படம் இல்லை.  தற்போதைய அரசு விழாக்களில் முதலமைச்சரின் படமும் இடம் பெறுவதில்லை.  இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரிலும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் படம் இடம் பெறவில்லை.  தமிழ்நாடு அரசின் சின்னமும் முதல்வரின் பெயரும் மட்டுமே இடம்பெற்றிருந்தது.  இந்த மாற்றங்களை கண்டு கோவை மக்கள் பாராட்டி வருகின்றனர்.