தைரியமிருந்தால் என் மீது வழக்குப் போட்டுப் பாருங்கள்- முதல்வருக்கு அண்ணாமலை சவால்

 
as


 ஸ்ரீரங்கம் கோயில் மண்டபத்தில் பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில் அரசு அதிகாரிகள் மீது வழக்கு போடுவது சரியல்ல என்று சொன்ன தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ,  தமிழக அரசுக்கு தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போடட்டும் என்று சவால் விடுத்தார்.  

 தமிழக பாஜக தலைவராக  பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் எந்த ஒரு பிரச்சனைக்கும் அறிக்கை, பேச்சு, பேட்டி என்று எதிர்க்கட்சி அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு அதிரடி காட்டி வருகிறார் அண்ணாமலை.  இதனால் திமுகவினருக்கும்  பாஜகவினருக்கும்  இடையே தொடர் வாக்குவாதம் போய்க்கொண்டிருக்கிறது.

ssss

இந்த நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,  திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் மண்டபத்தில் பிரதமரின்  உரை ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில் தமிழக அதிகாரிகள் மீது வழக்குப் போடுவது சரியல்ல.   முடிந்தால் தமிழக அரசுக்கு தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போட்டு பாருங்கள் என்று சவால் விடுத்தார்.

 அவர் மேலும்,   மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுகு 5 ஆயிரம் ரூபாய் அண்ணாமலை கொடுக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் சொல்கிறார்.   பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம் நடத்த இருக்கிறது.  அதேபோல் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்க கோரி நாளை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

asss

 மேலும்,  எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது ஒரு கருத்தையும் முதல்வரான பின்பு ஒரு செயலையும் செய்கிறார் ஸ்டாலின்.  முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது நிவர் புயலால் கடும் சேதம் ஏற்பட்ட போது ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.  ஆனால் தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் எதிரொலியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் நிவாரணம் அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.  அதனால்தான் அவர் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றையும் முதல்வராக இருக்கும்போது ஒன்றை செய்கிறார் என்று சொல்கிறேன் என்றார்.