“ஆ.ராசா விலைமாதர்கள் வீட்டில் …” ஹெச்.ராஜாவின் ஆபாச பேச்சு!!

 

“ஆ.ராசா விலைமாதர்கள் வீட்டில் …” ஹெச்.ராஜாவின் ஆபாச பேச்சு!!

திமுகவின் ஆ.ராசா முதல்வரின் தாயாரையும் அவரின் பிறப்பையும் இழிவாக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

“ஆ.ராசா விலைமாதர்கள் வீட்டில் …” ஹெச்.ராஜாவின் ஆபாச பேச்சு!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து பரப்புரை மேற்கொண் திமுக எம்.பி. ஆ.ராசா, நல்ல உறவில், ஆரோக்கியமாக சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறை பிரசவம் பழனிசாமி. நல்ல குழந்தைக்கு தாய்ப்பால் போதும். தமிழகம் தான் அவருக்கு தாய். குறை பிரசவ குழந்தையை காப்பாற்ற, டில்லியில் இருந்து மோடி என்ற, டாக்டர் வருகிறார்” என்று தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமியின் மதிப்பு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அணிந்துள்ள காலனியின் மதிப்பை விட குறைவு என்றும் சாடினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் தேர்தல் ஆணையம் வரை செல்ல, யாராகினும் கண்ணியத்துடன் பேசுங்கள் என்று ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

“ஆ.ராசா விலைமாதர்கள் வீட்டில் …” ஹெச்.ராஜாவின் ஆபாச பேச்சு!!

இந்நிலையில் பாஜக காரைக்குடி வேட்பாளர் ஹெச். ராஜா வெளியிட்டுள்ள வீடியோவில், “திமுகவின் ஆ.ராசா, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை இழிவாக பேசியிருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் நேரத்தில் ஆ. ராசா இப்படி பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதனால் தேர்தல் ஆணையம் உடனடியாக ஆ. ராசாவை கைது செய்ய வேண்டும். இன்னும் ஒருசில நாட்களில் ஊட்டி தொகுதியை இழக்க்கூடிய கிரிமினல் குற்றவாளி ராசா பெண்மையை மதிக்காமல் பேசியுள்ளதை பாஜக கண்டிக்கிறது. தி.க, திமுகவின் டிஎன்ஏவே இதுதான்.

பெண்களை போகப்பொருளாக கருதி, தினந்தோறும் விலை மாதர்களின் வீடுகளில் இருந்தவர்கள் இப்படிதான் பேசுவார்கள். முதல்வரின் தாயாரை இழிவாக பேசியதற்காக ஆ.ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் அவர் போகும் இடமெல்லாம் மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இந்த விவகாரத்தை பாஜக சும்மாவிடாது” என்று கூறியுள்ளார்.