மக்கள் விரும்பியதை உண்ண உரிமை உண்டு.. அதை பா.ஜ.க. ஒரு போதும் தடுக்காது... சி.ஆர். பாட்டீல் உறுதி

 
அசைவ உணவு தள்ளுவண்டி கடை

மக்கள் விரும்பியதை உண்ண உரிமை உண்டு, அதை பா.ஜ.க. ஒரு போதும் தடுக்காது என்று குஜராத் பா.ஜ.க. தலைவர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.

குஜராத்தில் அசைவ தெரு வியாபாரிகள்  அரசு நிர்வாகம் தொடர்ச்சியாக கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக சர்ச்சை நிலவி வருகிறது. அகமதாபாத், பாவ்நகர், ராஜ்கோட், ஜூனாகத் மற்றும் வதோரா ஆகிய பா.ஜ.க. ஆளும் 5 மாநகராட்சிகளின் தெருக்களில் அசைவ உணவுகளை விற்கும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநகராட்சிகள்  அறிவித்துள்ளன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சி.ஆர்.பாட்டீல்
இந்நிலையில் பா.ஜ.க. ஆளும் மாநகராட்சிகளின் அறிவிப்புக்கு முரண் பாடாக அம்மாநில பா.ஜ.க. தலைவர் சி.ஆர். பாட்டீல் பேசியுள்ளார். இது தொடர்பாக சி.ஆர்.பாட்டீல் கூறியதாவது: அப்படியொரு முடிவை யாரும் எடுக்கவில்லை. மக்கள் விரும்பியதை உண்ண உரிமை உண்டு, அதை பா.ஜ.க. ஒரு போதும் தடுக்காது. அகற்றுவதற்கான காரணம் வேறு ஏதாவது இருக்கலாம். அவர்கள் சைவம், அசைவம் உணவுகளை விற்பதால் அல்ல. 

தெருவோர கடை

இந்த வண்டிகளால் நடைபாதை ஆக்கிரமிப்பு, அகற்றப்பட வேண்டும் என்று அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.  அவை அகற்றப்பட வேண்டும். ஆனால் அவர் (அமைச்சர்) மற்றும்  அனைத்து  (மாநகராட்சிகள்) மேயர்களும் அவர்களை (வண்டிகள் மற்றும் கடைகளை) நிறுத்தும் எந்த திட்டமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்  தெரிவித்தார்.