பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மக்கள் சொந்த மாநில அரசுகளிடம் கேட்க வேண்டும்.. நிர்மலா சீதாராமன்

 
“செஸ் வரியை ரத்து செய்தால், ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் விலை”

நாங்கள் வரியை குறைத்து விட்டோம் அதனால்  பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து சொந்த மாநில அரசுகளிடம் மக்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையிலிருந்து மீண்டு வருவதையடுத்து, நாட்டில் முதலீட்டு சூழலை மேம்படுத்தும் நோக்கில் அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் நிதியமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த திங்கட்கிழமை இரவு ஒரு கலந்துரையாடலை நடத்தினார். அதன் பிறகு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சென்னையில் நகரத்தார்களின் சர்வதேச மாநாடு | நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததையடுத்து, மத்திய அரசு எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்கும்படி மாநில அரசுகளிடம் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. எரிபொருள் விலை உயர்வு குறித்து மக்கள் தங்கள் சொந் மாநில அரசுகளிடம் கேட்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் எரிபொருளை சேர்பதற்கான விகிதத்தை நிர்ணயிக்கும் வரை, பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி.யில் சேர்க்க முடியாது.

வாட் வரி

மத்திய அரசு அண்மையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை முறையே ரூ.5 மற்றும் ரூ.10 குறைத்தது. இதனையடுத்து உத்தர பிரதேசம், கர்நாடாக மற்றும் கோவா உள்பட பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்களில் அந்த அரசுகள் வாட் வரியை உடனடியாக குறைத்தன. ஒடிசா, ஜம்மு அண்டு காஷ்மீர் அரசுகளும் வாட் வரியை குறைத்தன. அதேசமயம், எரிபொருள் (பெட்ரோல்,டீசல்) மீதான கலால் வரியை மத்திய அரசு மேலும் குறைக்க வேண்டும் என்று ராஜஸ்தான் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.