“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி!

 

“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி!

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், “திமுகவைப் போல, அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்குக் கட்சித் தொண்டர்கள்தான் வாரிசு.

“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி!

அதிமுக ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் இதை எடுத்துக் கூறி வாக்குச் சேகரிக்க வேண்டும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதே பாணியை உள்ளாட்சித் தேர்தலில் கையாண்டு வெற்றி பெற பல தில்லுமுல்லுகளைத் திமுகவினர் செய்வார்கள். இதை அதிமுக முறியடித்து உள்ளாட்சித் தேர்தலில் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, தேர்தல் முடிந்தபிறகு ஒரு பேச்சு என இருப்பவர்கள் திமுகவினர்.

“நான் நினைச்சிருந்தா அன்னைக்கே முடிச்சிவிட்டுருப்பேன்” – திமுகவை எச்சரிக்கும் எடப்பாடி!

திமுக ஆட்சியமைத்து கடந்த 4 மாதங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அவதூறு பரப்பி, பொய் வழக்குகளைப் போட்டு வருகிறது. மக்கள் நலனை அவர்கள் கொஞ்சம்கூட யோசிக்கவில்லை. தமிழகத்தில் முதல்வராக நான் 4 ஆண்டுகள் 2 மாதங்கள் இருந்தேன். நான் நினைத்திருந்தால் திமுவினர் மீது பல வழக்குகளைப் போட்டிருப்பேன். ஆனால், அப்படிச் செய்யவில்லை. மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பணியாற்றினோம். மக்கள் நலன்தான் முக்கியம் என எண்ணிப் பணியாற்றினோம்’’ என்றார்.