கடைசி நேரத்தில் காலைவாரிவிட்ட திமுக முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் கட்சியிலிருந்து நீக்கம்!

 

கடைசி நேரத்தில் காலைவாரிவிட்ட திமுக முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் கட்சியிலிருந்து நீக்கம்!

புதுச்சேரி மாநிலத்தின் தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்ததார். புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்கு இறுதி நேரத்தில் வெங்கடேசனின் ராஜினாமா செய்ததும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. புதுச்சேரியில் தற்போது உள்ள அரசால் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்றும், கட்சித் தலைமையிடமும் ஸ்டாலினிடமும் சொல்லிவிட்டுதான் ராஜினாமா செய்தேன் என்றும் வெங்கடேசன் தெரிவித்திருந்தார்.

கடைசி நேரத்தில் காலைவாரிவிட்ட திமுக முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் கட்சியிலிருந்து நீக்கம்!

இந்நிலையில், புதுச்சேரி முன்னாள் திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன், கட்சியில் இருந்து தற்காலிக நீக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.வெங்கடேசன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.