எட்டு வழிச்சாலைக்கு முயற்சிக்கும் திமுக

 
எஇ

 சென்னை -சேலம் எட்டு வழி சாலைக்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.   இத்திட்டத்தினால் மத்திய அரசும் அதிமுகவும் கடும் கண்டனங்களை சந்தித்து வந்தன.  இத்திட்டத்தை  நிறைவேற்றியே தீருவது என்றே மத்திய அரசு சொல்லி வருகிறது.  இந்நிலையில் சென்னை -கன்னியாகுமரி சாலையை எட்டு வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக நிதியமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.

ஏ

 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அனைத்து மாநில முதலமைச்சர்கள் நிதியமைச்சர்கள் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி இருக்கிறாகள்.  கடந்த 15. 11. 2021 ல் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது .   

தமிழ்நாட்டின்  சார்பாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி .டி. ஆ.ர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுள்ளார்.   அப்போது அவர்,  பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.   அதில் முக்கியமானதாக சென்னை, கோயம்புத்தூர்,  திருச்சிராப்பள்ளி,  தூத்துக்குடி ஆகிய நான்கு முக்கிய விமான நிலையங்களை விரிவு படுத்துவதில் உள்ள இடையூறுகளுக்கு தீர்வு காண்பதில் மத்திய அரசு ஒத்துழைப்பை கோரினார்.

 மதுரை விமான நிலையத்தை பொறுத்தவரையிலும் நிலம் கையகப்படுத்தப்பட்டு இந்திய விமான நிலையத்தில் ஆணையத்திற்கு ஒப்படைக்கும் பணி நிறைவடைந்து இருப்பதாகவும் அப்பகுதியில் கூடுதல் வர்த்தகம் விமான போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு மதுரை விமான நிலையத்தினை விரைவில் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ப்

 தொழிற்சாலைகளுக்கான தளவாட செலவினை குறைக்கும் வகையில் சென்னை - கன்னியாகுமரி சாலை முழுவதையும் 8 வழிச்சாலையாக மேம்படுத்தவும்,  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஆணையத்திடம் நிலுவையில் இருக்கும் 11 திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.   மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்படும் என்றும் என்பதையும் அவர்  உறுதிப்படுத்தி உள்ளார்.