கொளத்தூரில் சிங்கிளாக களமிறங்கும் ஸ்டாலின்

 

கொளத்தூரில் சிங்கிளாக களமிறங்கும் ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

கொளத்தூரில் சிங்கிளாக களமிறங்கும் ஸ்டாலின்

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் , மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் மனித நேய மக்கள் கட்சி -2, முஸ்லீம் லீக் -3, விசிக -6 தொகுதிகள் முடிவாகியுள்ளது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9 தொகுதிகள் கேட்டு வருகிறது. அதேபோல் காங்கிரஸ, மதிமுக கட்சிகளுக்குள் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, திமுக விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் கடந்த 5 நாட்களாக நடந்து வருகிறது.

கொளத்தூரில் சிங்கிளாக களமிறங்கும் ஸ்டாலின்

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்துார் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த நிலையில், நேர்காணல் நடைபெற்றது. சென்னையில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆகியோரிடம் நேர்காணல் இன்று நடைபெற்றது. ஸ்டாலினை எதிர்த்து திமுக சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.