சூடு சொரணை இருந்தால் திமுக பதில் தரலாம் – பாஜக தடாலடி

 

சூடு சொரணை இருந்தால் திமுக பதில் தரலாம் – பாஜக தடாலடி

பாதிரியார்கள் என்றால் அன்பையும் அமைதியை மட்டும் போதிப்பார்கள் என்றில்லை என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் ஜார்ஜ் பொன்னையா. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை கிறிஸ்தவ இயக்கம் மற்றும் ஜனநாயக கிறிஸ்தவ பேரவை- முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசிய பேச்சு தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சூடு சொரணை இருந்தால் திமுக பதில் தரலாம் – பாஜக தடாலடி

முளகுமூடு மறைமாவட்ட சர்ச்சில் பங்கு தந்தையாக இருக்க அவர் பேசும்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எத்தனை கோவிலுக்கு போயி துணி உடுத்தாமல் சாமி கும்பிட்டாலும் , கும்பாபிஷேகம் செய்தாலும் இந்துக்கள் ஒருவர் கூட ஓட்டு போட மாட்டார்கள். திமுக ஜெயித்ததற்கு காரணம் கிறிஸ்தவ மக்களும் முஸ்லிம் மக்களும் போட்ட பிச்சைதான். இதை மறந்து விடாதீர்கள் என்றார்.

சூடு சொரணை இருந்தால் திமுக பதில் தரலாம் – பாஜக தடாலடி

கன்னியாகுமரி திமுக மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜனிடம் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்தித்து நாங்கள் ஓட்டு கேட்கிறோம் என்றேன். ஆனால் அவரோ வேண்டாம் பாதர்.. அப்படி செய்ய வேண்டாம். அப்படி செய்தால் ஒருவேளை இந்துக்களின் ஓட்டை கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்றார். ஆனால் நடந்தது என்ன? இதனால் பாஜக வேட்பாளர் எம். ஆர். காந்தி நாகர்கோவிலில் ஜெயித்து விட்டார் என்றும் பேசிய ஜார்ஜ் பொன்னையா, பூமா தேவியையும் விட்டுவைக்கவில்லை.

பூமாதேவியை செருப்பு போட்டு மிதிக்க மாட்டானாம். பாரதமாதா மீது செருப்பு பட்டுவிடக் கூடாதாம். ஆனால் நாம் ஷூ போட்டு நடக்கிறோம். இது எதற்காக ..பாரதமாதாவிடம் இருக்கும் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான். நமக்கு சொறி சிரங்கு வந்து விடக்கூடாது என்றுதான் தமிழக அரசு இலவச செருப்பு கொடுத்தது. இந்த பூமாதேவி ரொம்ப டேஞ்சரான ஆளு . அதனால செருப்பு போட்டுக்கங்க என்றுதான் அரசு இலவச செருப்பு கொடுக்கிறது என்றார்.

சூடு சொரணை இருந்தால் திமுக பதில் தரலாம் – பாஜக தடாலடி

அத்தோடு விடாமல் இஸ்லாமியர்கள் அழகாக சொன்னார்கள் முடியை.. ரோமத்தை.. எங்கள் பாஷையில் சொன்னால் எங்க மயிரை கூட புடுங்க முடியாது. பைபிளிலேயே இருக்கு.. ஒரு மயிரை கூட புடுங்க முடியாது… என்றார்.

ஒரு பாதிரியாரா இப்படி பேசுகிறார் என்று பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. பாரதமாதாவையே இந்த தாக்கு தாக்குபவர் பாரத பிரதமரையும் விட்டு வைப்பாரா என்ன? அமித் ஷாவும் மோடியையும் நாயும் புழுக்களும் சாப்பிடும் நிலை வரும். எங்களது சாபம் உங்களை அழிக்கும் என்று பேசி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

சூடு சொரணை இருந்தால் திமுக பதில் தரலாம் – பாஜக தடாலடி

இதுகுறித்து தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ’’தமது உண்மை முகத்தை வெளிப்படுத்திய கிறிஸ்தவ மத போதகருக்கு நன்றி’’என்று தெரிவித்துள்ளார் .
மேலும், ‘’சூடு சொரணை இருந்தால் திமுக பதில் தரலாம். அதற்கும் பயப்பட்டால் மதநல்லிணக்க விருது வழங்கி திமுக எம்.பி ஆக்கலாம். ஏசுநாதர் இவருக்கு நல்ல புத்தி தருவாராக.’’ என்று கூறியிருக்கிறார்.