தேச விரோதிகள்.. நாட்டுக்கு எது சாதகமாக இருந்தாலும் அதை எதிர்க்கிறார்கள்.. நடிகையை தாக்கிய பா.ஜ.க.

 
அபர்ணா சென்

தேச விரோதிகள், நாட்டுக்கு எது சாதகமாக இருந்தாலும் அதை எதிர்க்கிறார்கள் என்று நடிகை அபர்ணா சென்னை பா.ஜ.க.வின் திலிப் கோஷ் விமர்சனம் செய்துள்ளார்.

எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எப்.) அதிகார வரம்பை அதிகரித்ததை பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகையும், இயக்குனருமான அபர்ணா சென் விமர்சனம் செய்துள்ளார். எல்லை பாதுகாப்பு படைக்கு வேண்டியதை விடு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்படுகிறது. மேற்கு வங்க அரசு எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பற்றி சிந்திக்க வேண்டும் என்று அபர்ணா சென் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திலிப் கோஷ்

சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த அபர்ணா சென்னை பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவர் திலிப் கோஷ் கடுமையாக தாக்கியுள்ளார். திலிப் கோஷ் கூறுகையில், அவர்கள் தேச விரோதிகள். நாட்டுக்கு எது சாதகமாக இருந்தாலும் அதை எதிர்க்கிறார்கள். அது இந்திய பாரம்பரியம் அல்லது இந்துத்துவமாக இருந்தாலும். நாட்டிலிருந்து புகழையும், செல்வத்தையும் சம்பாதிக்கும் அதே மக்கள்தான் என்று தெரிவித்தார். இதற்கிடையே எல்லை பாதுகாப்பு படை வீரர்களை கொலையாளிகள் மற்றும் கற்பழிப்பாளர்கள் என்று கூறியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்குமாறு அபர்ணா சென்னுக்கு பா.ஜ.க.வின் அனிர்பன் கங்குலி சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்

மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் பஞ்சாப், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில், சர்வதேச எல்லையில், எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எப்.) அதிகாரங்களை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது எல்லையில் இருந்து நாட்டின் 50 கிலோ மீட்டர் தூரம் வரை சோதனைகளை நடத்தவோ, சந்தேகத்திற்குரியவர்களை கைது செய்யவோ எல்லை பாதுகாப்பு படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 15 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரம் இருந்தது.