மத்திய அரசு கொஞ்சம்தான் வரியை குறைத்திருக்கு.. நாங்க விரைவில் வாட் வரியை குறைப்போம்... அரவிந்த் கெஜ்ரிவால்

 
தேவையில்லாமல் வாய் விட்டு சிங்கப்பூரிடம் வாங்கி கட்டிக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

எரிபொருள் (பெட்ரோல், டீசல்) மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட் வரி) எனது அரசாங்கம் விரைவில் குறைக்கும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

மத்திய அரசு   கடந்த வாரம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்ததையடுத்து, பல மாநிலங்கள் குறிப்பாக பா.ஜ.க. ஆட்சி நடக்கு மாநில அரசாங்கங்கள் உள்ளூர் விற்பனை வரி அல்லது வாட் வரியை குறைத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்தது. இருப்பினும் டெல்லி, ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்கள் இன்னும்  வரி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை. 

பெட்ரோல் பம்ப்

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், மத்திய அரசின் கலால் வரி குறைப்பு மிகவும் குறைவு. எரிபொருள் (பெட்ரோல், டீசல்) மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட் வரி) எனது அரசாங்கம் விரைவில் குறைக்கும் என்று தெரிவித்தார். இதுவரை 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட் வரி

மத்திய  அரசின் கலால் வரி, டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் மற்றும் அடிப்படை எண்ணெய் விலையுடன் வாட் ஆகியவற்றை சேர்த்த பிறகு எரிபொருள் (பெட்ரோல், டீசல்) பம்ப் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அடிப்படை எண்ணெய் விலையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் சரக்கு கட்டணங்கள் அடங்கும்.