அதிமுக வேட்பாளருக்கு கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் இரட்டை தலைமை!

 

அதிமுக வேட்பாளருக்கு கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் இரட்டை தலைமை!

திருச்சி துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திராகாந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 2500 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் தான் அதிக அளவு பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்திருந்தது. அதன் படி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதிமுக வேட்பாளருக்கு கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் இரட்டை தலைமை!

இதனிடையே, தேர்தல் பிரச்சாரங்களில் மக்கள் கூட்டம் அதிகளவு கூடுவதால் வைரஸ் பரவல் பன்மடங்கு அதிகரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானது. இந்த நிலையில், திருச்சி துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திராகாந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது அதிமுக தலைமையை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அதிமுக வேட்பாளருக்கு கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் இரட்டை தலைமை!

அதிமுக வேட்பாளர் இந்திரா காந்தியின் கணவர் தங்கமணிக்கு ஏற்கனவே கொரோனா உறுதியாகி இருந்தது. அவரின் மூலம் இந்திரா காந்திக்கும் தற்போது கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அண்மையில், திருச்சியில் நடந்த பிரச்சாரத்தில் இந்திரா காந்தியுடன் 7 அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.