காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது.. உட்கட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை

 

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது.. உட்கட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை

காங்கிரஸ் காரிய கமிட்டியின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அர்னாப் கோஸ்வாமி விவகாரம், விவசாயிகள் போராட்டம், உட்கட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாக கருதப்படும் காரியக்கமிட்டிக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், பாலகோட் தாக்குதல் தொடர்பாக அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ்அப் உரையாடல், காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல், விவசாயிகள் போராட்டம், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் உள்பட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது.. உட்கட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை
அர்னாப் கோஸ்வாமி

காங்கிரஸ் கட்சிக்கு புதிய, எழுச்சிமிக்க, ஆக்கப்பூர்வமான மற்றும் முழு நேர தலைமை தேவை என்று மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சித் தேர்தல் நடத்தி, புதிய தலைவரைத் தேர்வு செய்ய 5 உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் குழுவை சோனியா காந்தி அமைத்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் மதுசூதன் மிஸ்திரி, ராஜேஷ் மிஸ்ரா,கிருஷ்ணா கவுடா, ஜோதிமணி, அரவிந்தர் சிங் ஆகியோர் கொண்ட குழு தேர்தல் நடத்தும் பணியை கவனித்து வருகின்றன.
தேர்தல் நடத்துவதற்கான பட்டியலை இந்தக் குழுவினர் தயாரித்துள்ள நிலையில், அதற்கு முன்பாக, காரியக்கமிட்டியிடம் தேர்தல் நடத்தும் தேதி குறித்து ஒப்புதல் பெற வேண்டும். அதன்பின் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது.. உட்கட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை
சோனியா, ராகுல் காந்தி

ஆதலால், இன்றைய காரியக் கமிட்டிக் கூட்டத்தில் உட்கட்சித் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடக்கும் எனத் தெரிகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பிரிவினர் அழுத்தம் கொடுக்கிறார்கள். ராகுல் காந்தி மீண்டும் தலைவர் பதவிக்கு வர மறுத்துவிட்டால், உட்கட்சித் தேர்தல் நடத்தி முடிக்கும்வரை அதாவது 2022-ம் ஆண்டுவரை சோனியா காந்தியே தலைவராக நீடிக்க வேண்டும் என்று சோனியா காந்தியின் ஆதரவாளர்கள் வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.