மோடி அரசின் ஏழைகளுக்கு எதிரான கொள்கைகளை மக்களிடம் எடுத்துரைக்க மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்.. காங்கிரஸ்

 
காங்கிரஸ்

மோடி அரசின் ஏழைகளுக்கு எதிரான கொள்கைகளை மக்களிடம் எடுத்துரைக்க, இம்மாதம் 14ம் தேதி முதல் 29ம் தேதி வரை நாடு தழுவிய மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஏழைகளுக்கு எதிரான கொள்கைகளை பொதுமக்களிடம் எடுத்து சொல்லுவதற்காக மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் என்ற பெயரில் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி நடத்த உள்ளது. இம்மாதம் 14ம் தேதி முதல் 29ம் தேதி வரை மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை காங்கிரஸ் மேற்கொள்ள உள்ளது.

மோடி

மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்பாக காங்கிரஸ் செய்தியாளர்கள் சந்திப்பை நேற்று நடத்தியது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கொள்கைகளால நாட்டு கடுமையான மற்றும் பரிதாபகரமான வாழ்க்கை முறையை அனுபவித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் பயங்கரமான விலை உயர்வை நாம் காண்கிறோம். சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையின்கீழ் அகில இந்திய காங்கிரஸ் இந்த அரசுக்கு எதிராக போராடுகிறது.

கே.சி.வேணுகோபால்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறோம். அரசின் ஏழைகளுக்கு எதிரான கொள்கைகளை எடுத்துரைக்க ஒரு குழுவை அமைத்துள்ளோம். அதற்கான செயல்திட்டத்தை முன்வைத்துள்ளோம். இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத விலைவாசி உயர்வு மற்றும் பா.ஜ.க.வின் தவறான ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக கட்சி தொண்டர்கள் இன்று பாதயாத்திரை, பொதுக்கூட்டங்கள் நடத்தி குரல் எழுப்புவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.