ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கம்.. காங்கிரஸ் தகவல்

 

ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கம்.. காங்கிரஸ் தகவல்

ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்டெடுப்பதற்கான செயல்முறைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் கட்சி தகவல்.

காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில், ஸ்ரீ ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அதன் மறுசெயல்பாட்டுக்கு உரிய செயல்முறை பின்பற்றப்படுகிறது. அதுவரை, அவர் தனது மற்ற சமூக வலைதளங்களில் உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருப்பார், மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவார் மற்றும் அவர்களின் நிலைமைக்காக போராடுவார். ஜெய் ஹிந்த் என்று பதிவு செய்துள்ளது.

ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கம்.. காங்கிரஸ் தகவல்
டிவிட்டர்

தனது டிவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், டோக்கியாவில் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா ஆகியோருக்கு ராகுல் காந்தி தனது வாழ்த்து செய்தியை புகைப்பட பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராமில் தெரிவித்து இருந்தார்.

ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கம்.. காங்கிரஸ் தகவல்
காங்கிரஸ்

கடந்த சில தினங்களுக்கு முன் ராகுல் காந்தி தனது டிவிட்டர் கணக்கில், டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தினை (முகத்தை மறைக்காமல்) வெளியிட்டு இருந்தார். இது சிறார் நீதி சட்டம் மற்றும் போக்சோ சட்டம் ஆகியவற்றை மீறிய செயல். இதன் மூலமாக அச்சிறுமியின் அடையாளத்தை தெரியப்படுத்தி இருக்கிறார். அதனால், டிவிட்டர் பக்கம் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பதிவினை நீக்க வேண்டும். நீக்கப்பட்ட பின்னர் அதுகுறித்த அறிக்கையை மூன்று நாட்களுக்குள் எங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று டிவிட்டர் நிறுவனத்துக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து சர்ச்சைக்குரிய அந்த ராகுலின் அந்த பதிவினை டிவிட்டர் நிர்வாகம் நீக்கியது. தற்போது ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.