தீவிரவாதிகளின் புல்வாமா தாக்குதலின் பின்னணியில் மோடி.. காங்கிரஸ் மூத்த தலைவர் பகீர் குற்றச்சாட்டு

 
புல்வாமா தாக்குதல்: தமிழர்கள் இருவர் வீரமரணம்

புல்வாமா தாக்குதலுக்கு அதிகார வெறி கொண்ட பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெறுவதாக இருந்த கூட்டத்தில் பங்கேற்று ரூ.42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். ஆனால் பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் மோடி தனது பயணத்தை ரத்து செய்து விட்டு டெல்லி திரும்பினார். இந்த விவகாரத்தில் பஞ்சாப் காங்கிரஸ் அரசை பா.ஜ.க. கடுமையாக சாடியது. ஆனால் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்வோ பிரதமரின் பாதுகாப்பு மீறல் ஒரு நாடகம் என்று குறிப்பிட்டார்.

சாலையில் பிரதமர் மோடி கன்வாய்

தேர்தலை சந்திக்கும் மற்ற மாநிலங்களில் அரசியல் பலன்களை பெறவும், அதிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ளவும்,70 ஆயிரம் பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் 500 பேர் மத்தியில் மோடி உரையாற்ற வேண்டிய அவமானத்திலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ளவும் பா.ஜ.க. இதனை செய்கிறது என்று நவ்ஜோத் சிங் சித்து குற்றம் சாட்டினார். இந்நிலையில் மற்றொரு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் உதித் ராஜ், புல்வாமா தாக்குதலுக்கு அதிகார வெறி கொண்ட பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டதாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

உதித் ராஜ்

உதித் ராஜ் டிவிட்டரில், பிரதமரின் பாதுகாப்பு மீறல் என்பது ஒரு நாடகம். இது 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்கள் உயிர் இழந்த கொடூரமான தீவிரவாதிகளின் தாக்குதலின் பின்னணியில் மோடி இருந்தார் என்பதை நிரூபிக்கிறது. உதித் ராஜின் இந்த கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.