முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவில் ஆய்வு!

 

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவில் ஆய்வு!

கொரோனா கட்டளை மையத்தை (War Room) முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு பார்வையிட்டார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரம் காட்டி வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கொரோனா படுக்கைகள் – மருந்து கையிருப்பு – உயிர்வளி ஆகிய அனைத்தையும் கண்காணித்து ஒழுங்கு செய்யும் கொரோனா கட்டளை மையத்தை (War Room) முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு பார்வையிட்டார். சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள கொரோனா கட்டளை மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவில் ஆய்வு!

இம்மையத்தில் படுக்கை வசதி, ஆக்ஸிஜன் ஒதுக்கீடு போன்றவை முறையாக நடக்கிறதா என்பதை அங்குள்ள பணியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அத்துடன் தேவையான உதவிகள் மற்றும் அலோசனைகளை தடையில்லாமல் தொடர்ந்து வழங்கவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது முதல்வரின் செயலாளர்கள் உதயச்சந்திரன், உமாநாத் மற்றும் தாரேஸ் அகமது ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் படுக்கைகள் – மருந்து கையிருப்பு – உயிர்வளி ஆகிய அனைத்தையும் கண்காணித்து ஒழுங்கு செய்யும் கொரோனா கட்டளை மையத்தை (War Room) பார்வையிட்டேன். #Covid19 கட்டுப்படுத்தலில் தமிழகத்தில் நிலவி வந்த குழப்பங்களை சீராக்கி திறனுடன் கையாளும் பாதையில் வெகு விரைவாக பயணிக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.