தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) சட்டம் 2021 நடைமுறைக்கு வந்தது.. டம்மியான அரவிந்த் கெஜ்ரிவால்

 

தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) சட்டம் 2021 நடைமுறைக்கு வந்தது.. டம்மியான அரவிந்த் கெஜ்ரிவால்

தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) சட்டம் 2021 நடைமுறைக்கு வந்தது. இதன்படி இனி டெல்லியின் அரசாங்கம் என்றால் துணைநிலை கவர்னர் அனில் பைஜால். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலால் துணைநிலை கவர்னரின் அனுமதி இல்லாமல் எந்தவொரு செயலையும் செய்ய முடியாது.

நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களைவில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த மார்ச் மாதத்தில் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா 2021ஐ தாக்கல் செய்தது. இந்த மசோதா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை காட்டிலும் துணைநிலை கவர்னருக்கு அதிகாரத்தை அளிக்கிறது. அதாவது டெல்லி சட்டப்பேரவையில் எந்த சட்டங்களை இயற்றினாலும் அதற்கு துணைநிலை கவர்னரின் ஒப்புதல் அவசியம்.

தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) சட்டம் 2021 நடைமுறைக்கு வந்தது.. டம்மியான அரவிந்த் கெஜ்ரிவால்
பிரதமர் மோடி

இந்த புதிய மசோதாவுக்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். துணைநிலை கவர்னர் வாயிலாக தேசிய தலைநகரை ஆட்சி செய்ய அவர்கள் (பா.ஜ.க.) விரும்புகிறார்கள் என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். இருப்பினும் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளில் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா 2021ஐ மத்திய அரசு நிறைவேற்றியது. இதனையடுத்து இந்த மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் இந்த திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து இந்த மசோதா சட்டமாக மாறியது.

தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) சட்டம் 2021 நடைமுறைக்கு வந்தது.. டம்மியான அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

தற்போது 2021 ஏப்ரல் 27ம் தேதி (கடந்த செவ்வாய்க்கிழமை) தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) சட்டம் 2021-ன் விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் தேதியாக மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இதன் பொருள் என்னவென்றால், ஏப்ரல் 28ம் தேதி (நேற்று) முதல் டெல்லியின் துணைநிலை கவர்னர் அனில் பைஜால் இப்போது யூனியின் பிரதேசத்தில் அரசாங்கம். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தால் துணை நிலை கவர்னரின் அனுமதி இல்லாமல் எந்தவொரு செயலையும் சுயமாக செய்ய முடியாது என்பதுதான் இதற்கு அர்த்தம்.