காட்பாடி தொகுதி ‘அதிமுக வேட்பாளர்’ மீது வழக்குப்பதிவு!

 

காட்பாடி தொகுதி ‘அதிமுக வேட்பாளர்’ மீது வழக்குப்பதிவு!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. வாக்காளர்களை கவரும் வண்ணம் வேட்பாளர்கள் புதுவித பிரச்சாரங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

காட்பாடி தொகுதி ‘அதிமுக வேட்பாளர்’ மீது வழக்குப்பதிவு!

இதனிடையே, தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்கிறதா? என தேர்தல் ஆணையமும் பறக்கும் படை அதிகாரிகளும் கண் கொத்திப் பாம்பாக பார்த்துக் கொண்டு இருக்கிறது. ஆங்காங்கே வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருக்கும் பரிசுப் பொருட்களும் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்பாடி தொகுதியில் உள்ள மெட்டுகுளம் ஓட்டலில் ரூ.18.41 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

காட்பாடி தொகுதி ‘அதிமுக வேட்பாளர்’ மீது வழக்குப்பதிவு!

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் இதன் பின்னணியில் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. அதனடிப்படையில், காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் தர முயற்சி, அதிகாரிகள் மிரட்டல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.