பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி.. கேப்டன் அமரீந்தர் சிங் தகவல்

 
கேப்டன் அமரீந்தர் சிங்

எதிர்வரும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் எங்க கட்சி கூட்டணி வைக்கும் என்று பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.

கேப்டன் அமரீந்தர் சிங்கின் ஊடக உதவியாளர் அமரீந்தர் சிங் கூறியதாக கூறியிருப்பதாவது: பஞ்சாபில் உள்ள நம் அனைவருக்கும் இது ஒரு பெரிய நாள். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நான் இந்த விஷயத்தை மத்திய அரசுடன் தொடர்ந்தேன். நரேந்திர மோடி ஜி மற்றும் அமித் ஷா ஜி ஆகியோரை சந்தித்து எங்கள் அன்னதாததாக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். உண்மையிலேயே அவர்கள் (விவசாயிகள்) மகிழ்ச்சி அடைகிறார்கள். விவசாயிகளை கேட்டறிந்து நமது கவலைகைளை புரிந்து கொண்டனர்.

விவசாயிகள் போராட்டம்

இது விவசாயிகளுக்கு பெரும் நிவாரணம் மட்டுமல்ல, பஞ்சாபின் முன்னேற்றத்திற்கும் வழி வகுத்துள்ளது. விவசாயிகளின் மேம்பாட்டுக்காக பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன். ஒவ்வொரு கண்ணிலிருந்தும் ஒவ்வொரு கண்ணீரை துடைக்கும் வரை நான் ஓய்வெடுக்க மாட்டேன் என்று பஞ்சாப் மக்களுக்கு நான் ஓய்வெடுக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார்.

பா.ஜ.க.

இதற்கிடையில் கேப்டன் அமரீந்தர் சிங் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எதிர்காலத்தில் தனது கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே தேர்தலுக்கு முந்தைய கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது. பா.ஜ.க.வுடன் தொகுதி பங்கீடு திட்டம் 110 சதவீதம் வகுப்பப்படும், விவசாயிகளும் போட்டியிட வேண்டும் என்று தெரிவித்தார். வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பேன் என்று அமரீந்தர் சிங் அண்மையில் தெரிவித்து இருந்தார். பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் என்று அறிவித்ததையடுத்து விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் கேப்டன் அமரீந்தர் சிங் பஞ்சாப் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது உறுதியாகியுள்ளது.