தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்த மர்ம நபர் ஒருவர், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள திமுக தலைவர் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். பதறிப்போன போலீசார் உடனடியாக மோப்ப நாய் உதவியுடன் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று வீடு முழுவதும் சோதனை செய்துள்ளனர். வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்க படாததால் நிலையில், அது புரளி என தெரியவந்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இதற்கு முன்னதாக நடிகர்கள் அஜித், ரஜினிகாந்த், விஜய் என பல சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. முதல்வர் வீட்டுக்கும் மிரட்டல் வந்துள்ளது. சோதனையில் அது புரளி என தெரியவரும். இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்கதையாகி வந்த நிலையில், இதன் பின்னணியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஷ்வர் என்ற இளைஞர் இருப்பது தெரியவந்தது. அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் நிலையில், அவரை போலீசார் கைது செய்ததாக தகவல்கள் வெளியானது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்த நிலையில், விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் அதே இளைஞரா அல்லது வேறு யாரேனும் இதன் பின்னணியில் இருக்கிறார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.