ராகுல் காந்தியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் கோவிட் இறப்புகளின் பிரச்சினையில் குழப்பத்தை உருவாக்கினர்… பா.ஜ.க. பதிலடி

 

ராகுல் காந்தியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் கோவிட் இறப்புகளின் பிரச்சினையில் குழப்பத்தை உருவாக்கினர்… பா.ஜ.க. பதிலடி

ராகுல் காந்தியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் கோவிட் இறப்புகளின் முக்கியமான பிரச்சினையில் குழப்பத்தை உருவாக்கினர். என்று பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன் டெல்லி உள்பட பல மாநிலங்களின் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான மக்கள் இறந்ததாக செய்திகள் வெளியாகியது. ஆனால் நாட்டில் யாரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் மத்திய அரசு தகவல் தெரிவித்தது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இதற்கு பா.ஜ.க.வின் தேசிய செய்திதொடர்பாளர் சம்பிட் பத்ரா பாயிண்ட் பாயிண்டாக பதிலடி கொடுத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: மத்திய சுகாதார துறை இணையமைச்சர் பாரதி பவார் மாநிலங்களவையில் சுகாதாரம் என்பது ஒரு மாநில விஷயம். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்ந்து பாதிப்புகள் றமறும் இறப்புகளின் எண்ணிக்கையை மத்திய அரசிடம் தெரிவிக்கின்றன என்று தெரிவித்தார். இரண்டாவதாக, அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இறப்புகளை புகாரளிப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ராகுல் காந்தியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் கோவிட் இறப்புகளின் பிரச்சினையில் குழப்பத்தை உருவாக்கினர்… பா.ஜ.க. பதிலடி
ராகுல் காந்தி

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கோவிட் பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு ஒரு வழக்கமான அடிப்படையில் வழங்குகின்றன. இருப்பினும், ஒரு மாநிலமோ, யூனியன் பிரதேசமோ தங்களது அறிக்கையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு நபர் கூட இறந்து விட்டதாக கூறவில்லை. ராகுல் காந்தியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் கோவிட் இறப்புகளின் முக்கியமான பிரச்சினையில் குழப்பத்தை உருவாக்கினர். கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான போரில் வெற்றி பெற அனைவரும் ஒன்றுபட வேண்டிய நேரத்தில், சில அரசியல் தலைவர்கள் மோசமான அரசியலை விளையாடுவது கண்டிக்கத்தக்கது.

ராகுல் காந்தியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் கோவிட் இறப்புகளின் பிரச்சினையில் குழப்பத்தை உருவாக்கினர்… பா.ஜ.க. பதிலடி
அரவிந்த் கெஜ்ரிவால்

மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அரசுகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு இறப்பு கூட நிகழவில்லை என்று தெரிவித்துள்ளன. சத்தீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு இறப்பு நிகழவில்லை என்று தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 23 மற்றும் 24 தேதிகளில் ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 21 பேர் இறந்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். மேலும் ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி அதனை அரசியலாக்கினார். இந்த விஷயம் உயர் நீதிமன்றத்துக்கு சென்றது. இதனையடுத்து டெல்லி அரசு ஒரு குழுவை அமைத்தது, அது தனது அறிக்கையை சமர்ப்பித்தது. நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைத்ததாகவும், பற்றாக்குறை பற்றி எதுவும் குறிப்பிடப்பவில்லை என்றும் அந்த குழு அந்த அறிக்கையில் தெரிவித்தது. இவ்வாறு அவ்வாறு அவர் தெரிவித்தார்.