ராமர் கோயிலுக்கு தனது பங்களிப்பாக ரூ.1 கோடி கொடுத்த பா.ஜ.க. எம்.பி. கவுதம் காம்பீர்…

 

ராமர் கோயிலுக்கு தனது பங்களிப்பாக ரூ.1 கோடி கொடுத்த பா.ஜ.க. எம்.பி. கவுதம் காம்பீர்…

பா.ஜ.க. எம்.பி. கவுதம் காம்பீர் ராமர் கோயில் கட்டுமானத்துக்கு தனது மற்றும் குடும்பத்தினரின் பங்களிப்பாக ரூ.1 கோடியை நன்கொடையை வழங்கினார்.

இந்துக்களின் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதியன்று பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றுடன் தொடங்கியது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ள ராமர் கோயிலுக்கு தேவையான நிதியை உள்நாட்டில் திரட்டப்பட்டு வருகிறது. ராமர் பக்தர்களிடமிருந்து தன்னார்வ நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படும். அதற்காக 10, 100 மற்றும் 1,000 ரூபாய் கூப்பன்கள் கிடைக்கும். நிதி ஒப்பந்தங்கள் மற்றும் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, அறக்கட்டளை ரூ.10 மதிப்பில் 4 கோடி கூப்பன்களையும், ரூ.100 மதிப்பில் 8 கோடி கூப்பன்களையும், ரூ.1,000 மதிப்பில் 12 லட்சம் கூப்பன்களையும் அச்சிட்டுள்ளது.

ராமர் கோயிலுக்கு தனது பங்களிப்பாக ரூ.1 கோடி கொடுத்த பா.ஜ.க. எம்.பி. கவுதம் காம்பீர்…
கவுதம் காம்பீர்

ராமர் கோயிலுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. உள்பட பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. முன்னாள் கிரிக்கெட் வீரரும், டெல்லி பா.ஜ.க. எம்.பி.யுமான கவுதம் காம்பீர் ராமர் கோயில் கட்டுமானத்துக்கு தனது மற்றும் குடும்பத்தினரின் பங்களிப்பாக ரூ.1 கோடி வழங்கினார். இது தொடர்பாக கவுதம் காம்பீர் கூறியதாவது:

ராமர் கோயிலுக்கு தனது பங்களிப்பாக ரூ.1 கோடி கொடுத்த பா.ஜ.க. எம்.பி. கவுதம் காம்பீர்…
ஆர்.எஸ்.எஸ்.

ஒரு புகழ்பெற்ற ராமர் கோயில் அனைத்து இந்தியர்களின் கனவாக இருந்து வருகிறது. இறுதியாக இந்த நீண்டகால பிரச்சினை முடிவுக்கு வந்தது. இது ஒற்றுமைக்கும், அமைதிக்கும் வழி வகுக்கும். இந்த முயற்சியில் என்னிடமிருந்தும் என்து குடும்பத்தினரிடமிருந்தும் ஒரு சிறிய பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.