சங்கிகளின் அண்ணா! கோபாலபுரம் கதறட்டும்! எடப்பாடி பதறட்டும்! -பாஜக போஸ்டர் பரபரப்பு

 
a

அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்களின் பிடிவாதத்தால் நாளுக்கு நாள் அதிமுக - பாஜக கூட்டணி இடையேயான மோதல் வலுத்து வருகிறது.  அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சாதாரணமாக தொண்டனாக இருப்பேன்.  கூட்டணியைக்காக என்னால் சமரசம் செய்து கொடுக்க முடியாது . எந்த நிலையிலும் என்னை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று அண்ணாமலை கறார் காட்டி வருவதால் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்க தலைமை முடிவெடுத்து இருப்பதாக தகவல் பரவுகிறது. 

j

 இதனால் தமிழக பாஜகவில் இருந்து அண்ணாமலை வெளியேறலாம் என்ற தகவலும் பரவுகிறது.  அவர் வெளியேறினால் அவருடன் பாஜகவினர் யாரும் செல்ல மாட்டார்கள் என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்திருக்கிறார்.  இதற்கு அண்ணாமலை ஆதரவாளர் திருச்சி சூர்யா சிவா,  எம்ஜிஆர் திமுகவை விட்டு வெளியே சென்ற போது  அவர் பின்னால் யாரும் செல்லவில்லை.  ஆனால் அவர் வெற்றி பெற்றார்.  மக்களின் ஆதரவு தான் முக்கியம் . எம்ஜிஆர் மாதிரி அண்ணாமலையும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராவார் என்று தெரிவித்திருக்கிறார்.

 இந்த நிலையில் மதுரையில் பாஜக நிர்வாகிகள் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.  இது பாஜகவில் மட்டுமல்லாது அதிமுக,  திமுக வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

அந்த போஸ்டரில்,   ’’கழகங்கள் இல்லா தமிழகம்.. கவலைகள் இல்லாத தமிழர்கள்.. உங்களோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு.  எங்கள் அண்ணா.. எடப்பாடி பதறட்டும்.. கோபாலபுரம் கதறட்டும்.. இவர் திராவிட அண்ணா இல்லை.  சங்கிகளின் அண்ணா. ‘’என்றும்,

இவண்,  கல்மேடு மோடி என்கிற அருள்,  ஒன்றிய செயலாளர் கிழக்கு ஒன்றியம்.  மதுரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மற்றும் சோலை பிரதர்ஸ் என்று அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.