விவசாய சட்டங்களை திரும்ப பெற்றதன் மூலம் தாங்கள் தவறு செய்துள்ளோம் என்று பா.ஜ.க. நிரூபித்துள்ளது.. காங்கிரஸ்

 
காங்கிரஸ்

விவசாய சட்டங்களை திரும்ப பெற்றதன் மூலம், அந்த சட்டங்களில் தாங்கள் தவறு செய்துள்ளோம் என்று பா.ஜ.க. நிரூபித்துள்ளது என்று பூபேஷ் பாகல் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் முதல்வரும், உத்தர பிரதேச தேர்தல் பார்வையாளருமான பூபேஷ் பாகல் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இமாச்சல பிரதேச இடைத்தேர்தலில் தோல்வியடைந்தால் எரிபொருள் விலையை (பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு குறைத்தது, விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்ததால் சட்டத்தை திரும்ப பெற முடிவு செய்தனர். விவசாயிகளிடமிருந்து உரிமைகளை பறித்து சில முதலாளிகளிடம் ஒப்படைக்க பா.ஜ.க. விரும்புகிறது.  இந்த விவசாய சட்டங்கள் முதலாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, விவசாயிகள் அவற்றை ஒருபோதும் விரும்பவில்லை, இந்த சட்டங்கள் அவர்கள் மீது திணிக்கப்பட்டது. 

போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு அரிசி, பணம் அனுப்பிய காங்கிரஸ் மாணவர் பிரிவு… பூபேஷ் பாகல் தகவல்

மத்திய அரசு நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,940ஆக அறிவித்தது. ஆனால் உத்தர பிரதேசத்தில் ரூ.800 முதல் ரூ.1,200 வரைதான் நெல் விற்பனை செய்யபடுகிறது. விவசாயிகளை பா.ஜ.க. நடத்திய விதம் பின்விளைவுகளை ஏற்படுத்தும். விவசாயிகள் தங்கள் போராட்டம், போராட்டத்தில் இறந்தவர்கள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்.களையும் மறக்க மாட்டார்கள். விவசாயிகளின் போராட்டத்தை ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் ஆதரித்தது. விவசாய சட்டங்களை திரும்ப பெற்றதன் மூலம், அந்த சட்டங்களில் தாங்கள் தவறு செய்துள்ளோம் என்று பா.ஜ.க. நிரூபித்துள்ளது. லக்கிம்பூர் கெரி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது. 

பா.ஜ.க.

இந்த சம்பவத்தில் நான்கு விவசாயிகளின் மரணம் வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலைகள் மற்றும் இது ஒரு பா.ஜ.க. தலைவரின் சதி. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியை உச்ச நீதிமன்றமே நியமனம் செய்து இருப்பது, உத்தர பிரதேச அரசின விவசாயிகள் மீதான அணுகுமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அனைத்து கட்சிகளுக்காகவும் உழைத்த பிரசாந்த் கிஷோருக்கு தனக்கென ஒரு சித்தாந்தம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.