"திரைத்துறையை விட்டுவிடுங்கள் அன்புமணி" - பாரதிராஜாவின் "சூடான" அறிக்கை!

 
பாரதிராஜா

சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் படம் ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருசேர எழுப்பியுள்ளது. பெரும்பாலான மக்கள் ஜெய்பீம் படத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வன்னியர் சங்கத்தினரும் பாமகவினரும் பாஜகவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அன்புமணி மறைமுகமாக எச்சரித்து சூர்யாவுக்கு கடிதம் எழுதினார். அதேபோல வன்னியர் சங்கம் சார்பில் நேற்று சூர்யாவிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சூர்யாவை அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு என பாமகவினர் அறிவித்துள்ளனர்.புதுமுகங்கள் பற்றி பாரதிராஜா!- Dinamani

இவ்வாறு எதிர்ப்புகள் கிளம்ப திரைத்துறையிலிருந்து சூர்யாவுக்கு ஆதரவுக்குரல் எழுந்துள்ளது. இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று பேசப்படும் ஏற்றத்தாழ்வு, சமூக நீதி போன்றவற்றை யாரும் பேசத் துணியாத காலகட்டத்தில் ஒரு களப் போராளியாக, படைப்பாளியாக நின்று திரைப்பதிவாக்கம் செய்த உரிமையில் உங்களுக்கு உங்கள் பாரதிராஜா எழுதுகிறேன். திரைத்துறை என்பது எல்லாவற்றையும் பேசக்கூடியது. மனித வர்க்கம் சந்திக்கும் எல்லா நிகழ்வுகளையும் படம்பிடித்து மக்களிடமே முன் வைக்கும் ஒரு இயங்குதளம். 

ஜெய்பீம் திரைப்படத்தில் சர்ச்சை… குறிப்பிட்ட சமூகம் தாக்கப்பட்டுள்ளது?  சிக்கலில் டைரக்டர்!! | jaibhim movie controversy scene

பல வாழ்க்கைப் படைப்புகள் நம் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அது மக்கள் முன்னிலையில் வைக்கப்படும்போது உண்மை எது? தவறு எது? எனத் தெரிந்தே அவர்கள் அதை வரவேற்றோ, புறந்தள்ளியோ வருகின்றனர். அப்படி ஒரு படைப்பாக வரவேற்கப்பட்டதே "ஜெய்பீம்". அன்பு பிள்ளைகள் சூர்யா-ஜோதிகாவால் தயாரிக்கப்பட்டு தம்பி ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த படம்.  கடந்த கால சம்பவங்களைப் படமாக்கும் போது.. அதை படமாகப் பார்த்துவிட்டு சமூக மாற்றத்திற்கு அது எவ்வகையில் பயனாகும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.

ஜெய் பீம் விமர்சனம்... இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி..! | jai bhim  cinema review

அதில் பூதக்கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும். இதை படைப்பாக மட்டுமே பார்க்க முயன்றால் நீங்களும், உங்கள் தந்தையும் போராடும் அதே எளியவர்களுக்கான போராட்டம்தான் இது. தம்பி சூர்யாவைப் பொருத்தவரையில் யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவரல்ல. கல்வி, எளியவர்களுக்கான உதவி என நகர்ந்துகொண்டிருப்பவர். அவருக்கு எல்லோரும் சமம். தன்னால் எங்கேனும் ஒரு மாற்றம் நிகழுமா? எனப் பார்ப்பவர். அவரை ஒரு சமூகத்திற்கு எதிரானவராக சித்தரிப்பது, வன்முறையை ஏவிவிடுவது மிகத்தவறான முன்னுதாரணம். 

ஜெய்பீம் காலண்டர் காட்சி சர்ச்சை - நடந்தது என்ன? - Mei Ezhuththu

ஒரு படைப்பின் சுதந்திரத்தை அதன்படியே விட்டுவிடுவது இன்னும் அதிகமான நல்ல படைப்புகளைக் கொண்டுவர உதவும்.  சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன. சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளது. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு  வரவேண்டாமே. நடுவண் அரசு, மாநில அரசு, சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்களின் குரல் ஒலிக்கட்டும். எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள். 

ஜெய்பீம்' - பிரகாஷ் ராஜ் கன்னத்தில் அறையும் காட்சி: இந்தி ஆதரவாளர்கள்  எதிர்ப்பு - BBC News தமிழ்ஜெய்பீம்' - பிரகாஷ் ராஜ் கன்னத்தில் அறையும் காட்சி: இந்தி ஆதரவாளர்கள்  எதிர்ப்பு - BBC News தமிழ்

யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை.  இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வம்படியாக திணித்தோ, திரித்தோ அப்படத்தில் எந்த கருத்துருவாக்கமும் செய்யவில்லை. நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது. திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.