1962ல் இந்தியாவுக்கு வலுவான தலைமை இருந்திருந்தால் சீனாவுடான போரில் தோல்வி ஏற்பட்டு இருக்காது.. அருணாசல பிரதேச கவர்னர்

 
பி.டி. மிஸ்ரா

1962ல் இந்தியாவுக்கு வலுவான தலைமை இருந்திருந்தால் சீனாவுடான போரில் தோல்வி ஏற்பட்டு இருக்காது என்று அருணாசல பிரதேச கவர்னர் பி.டி. மிஸ்ரா தெரிவித்தார்.

அருணாசல பிரதேச கவர்னராக இருப்பவர் பி.டி. மிஸ்ரா. இவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி (பிரிகேடியர்). 1965ல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போரில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சாங்லாங் மாவட்டத்தில் உள்ள ராஜ்புத் படைப்பிரிவின் 14வது படைப்பிரிவின் செயல்பாட்டு தளத்தில் சைனிக் சன்மேலனில் நிகழ்ச்சியில் பி.டி.மிஸ்ரா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அருணாசல பிரதேச கவர்னர் பி.டி.மிஸ்ரா பேசுகையில் கூறியதாவது: 

நேரு

1962ல் இந்தியாவுக்கு வலுவான தலைமை இருந்திருந்தால் சீனாவுக்கு எதிராக எந்த பின்னடைவும் இருந்திருக்காது. (1962ல் இந்தியா-சீனா இடையே போர் நடந்தது. இந்த போரில் இந்தியா பெரும் தோல்வியை சந்தித்தது. அப்போது பாரத நாட்டின் பிரதமராக இருந்தவர் நேரு.) இப்போது களச் சமன்பாடுகள் மாறிவிட்டன. உலகின் சக்தி வாய்ந்த ஆயுதப்படைகளில் இந்தியாவும் ஒன்று. இருப்பினும், நமது காவலர்களை நம் குறைத்து மதிப்பிடக் கூடாது. நமது எல்லையில் ஏற்படும் எந்த சூழலுக்கும் ஒவ்வொரு ராணுவ வீரரும் தன்னை தயார்படுத்தி கொள்ள வேண்டும். 

மோடி

பிரதமர் நரேந்திர மோடி கீழ், ராணு வீரர்கள் நலனில் எப்போதும் அக்கறை உள்ளது. பாதுகாப்பு படையினர் மீதான அரசாங்க அணுகுமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது உச்ச அரசியல் தலைமை, ராணுவ வீரர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளது. ராணுவ வீரர்கள் ஒழுக்கத்தை பேணவும்,தங்களை கடுமையாக பயிற்றுவிக்கவும், பொதுமக்களுடன் இணைக்கமான உறவை பகிர்ந்து கொள்ளவும் வேண்டும். சீருடை அணிந்த ஆண்கள் உறுதியுடன் இருந்தால், அவர்கள் தங்கள் எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.