பா.ஜ.க. அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரே ஒரு தலைவர் அவரு மட்டும்தான்… அசோக் கெலாட் பாராட்டு

பா.ஜ.க. அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரே ஒரு தலைவர் அவரு மட்டும்தான்… அசோக் கெலாட் பாராட்டு

தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரே ஒரு தலைவர் அவரு மட்டும்தான் என்று ராகுல் காந்தியை ராஜஸ்தான் முதல்வர் பாராட்டியுள்ளார்.

செய்தி வாரஇதழ் ஒன்றில் காந்திகள் (சோனியா காந்தி, ராகுல் காந்தி) தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இந்த செய்தியை வெளிப்படையாக குறிப்பிடாமல் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அதற்கு பதில் அளித்துள்ளார். அசோக் கெலாட் இது தொடர்பாக கூறியதாவது: பொது வாழ்க்கையில் அந்த குடும்பம் (காந்தி) தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்ற தவறான எண்ணம் சிலருக்கு இருக்கிறது.

பா.ஜ.க. அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரே ஒரு தலைவர் அவரு மட்டும்தான்… அசோக் கெலாட் பாராட்டு
சோனியா காந்தி

அவர்கள் மற்றும் அவர்களின் தலைமை தரத்தின் மீது அனைத்து சமுதாய மக்களிடம் நம்பிக்கை உள்ளது. காந்திகள் மீதான இந்த நம்பிக்கையின் காரணமாக, நாடு முழுவதும் காங்கிரஸின் அந்தஸ்தும் கோப்பும் அவர்களுடன் உறுதியாக நிற்கின்றன. மேலும் குடும்பம் ஒரு போதும் தனிமைப்படுத்தப்படாது. கட்சி தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் ஒன்றுபட்டது, துடிப்பானது மற்றும் எந்தவொரு சவால்களையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு வலிமையானது.

பா.ஜ.க. அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரே ஒரு தலைவர் அவரு மட்டும்தான்… அசோக் கெலாட் பாராட்டு
ராகுல் காந்தி

சாமானிய மக்கள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக தேசிய ஜனநாய கூட்டணி அரசை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரே ஒரு தேசிய தலைவர் ராகுல் காந்திதான். போராட்டம் மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு என்பது தலைமையின் வரையறுக்கும் அடையாளமாகும். தேசத்தின் மீதான அவரது பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு யாரும் இணை இல்லை. நாங்கள் ஒரு துடிப்பான எதிர்க்கட்சி. எங்களுக்கு தேவையானது ஒரு துடிப்பான மற்றும் சுதந்திரமான பத்திரிகை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.