அரசு அலுவலகங்களில் இனி அரசியல்வாதி படங்களுக்கு பதிலாக அம்பேத்கர், பகத்சிங் படங்கள்தான் இருக்கும்.. கெஜ்ரிவால்

 
தேவையில்லாமல் வாய் விட்டு சிங்கப்பூரிடம் வாங்கி கட்டிக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி அரசு அலுவலகங்களில் இனி அரசியல்வாதிகள் மற்றும் முதல்வர்களின் படங்களுக்கு பதிலாக பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பகத்சிங் புகைப்படங்கள்தான் இருக்கும் என்று யூனியன் பிரதேச முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.

டெல்லியில் குடியரசு தின விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: டெல்லி அரசின் ஒவ்வொரு அலுவலகத்திலும் பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் இருக்கும் என்று இன்று (நேற்று) நான் அறிவிக்கிறேன். இனி முதல்வர் அல்லது அரசியல்வாதிகளின் புகைப்படங்களை நாங்கள் வைக்க மாட்டோம்.

பகத் சிங், அம்பேத்கர்

டாக்டர் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரால் நான் உண்மையிலேயே ஈர்க்கப்பட்டேன். இணையம் இல்லாத நேரத்தில், டாக்டர் அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் தனது கல்வியை தொடர்ந்தார். நாட்டிற்காக பெரிய கனவு காண வேண்டும் என்பது அவரது வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம்.

மெலானியா டிரம்ப்

ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி என்ற பி.ஆர்.அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு இன்று நாங்கள் உறுதிளிக்கிறோம். கடந்த 7 ஆண்டுகளில் கல்வித் துறையில் அந்த புரட்சியை கொண்டு வந்துள்ளோம். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் டெல்லி அரசு பள்ளிகளை பார்வையிட்டார். எங்களுக்கு சான்றிதழ் கிடைத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.