’’சூர்யாவின் திமிர்த்தனமாக பதிலால்தான் கோபம் வருகிறது’’

 
a

 பாமக-  சூர்யா மோதல் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே இருக்கிறது.   இந்த நிலையில் பாமகவை சேர்ந்தவரும் நீதியின் குரல் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பாஸ்கரன் ஒரு பரபரப்பு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

 அந்த வீடியோவில்,   அன்புமணி ராமதாஸ் எழுப்பிய 9 கேள்விகளுக்கு நேர்மையாக பதில் கூறாமல் தன்னுடைய ஆணவத்தை திமிர் தனத்தை காட்டும் வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார் சூர்யா.   இது சார்ந்து அவர் முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.   அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறா.ர் போதாத குறைக்கு திருமாவளவனுக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் .

ட்

பாமக விவகாரம் என்றாலே விடுதலை சிறுத்தைகளுக்கு வெல்லம் தின்பது போலத்தான் ஆகிவிடும்.   உடனே திருமாவளவன் இதோ நாங்கள் இருக்கிறேன் என்று திருவாய் மலர்ந்து சூர்யா அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.  

 பாமக ஏதோ சூர்யாவை மிரட்டுவது போலவும் விடுதலை சிறுத்தைகள் சூர்யாவை காப்பது போலவும் எடுத்துக்கொள்கிறார்கள்.   சூர்யாவை நடிக்க கூடாது என்றெல்லாம் பாமக சொல்லவில்லை.   அவர் திமிர்த்தனமாக பதில் சொல்லும்போது தான் கோபம் வருகிறது.   சூர்யா ஏன் இப்பொழுது திருமாவளவனை துணைக்கு அழைத்து வருகிறார்.   திருமாவளவன் சரக்கு மிடுக்கு பேச்சு எந்த அளவுக்கு விமர்சிக்கப்பட்டது  என்பது எல்லோருக்கும் தெரியும்.  சூர்யாவின் கவுண்டர் சமுதாய மக்களே அவரை கண்டித்தனர்.

ச்சு

 இவ்வளவு நாட்களாக அமைதியாக இருந்த திருமாவளவன் இப்போது சீறுகிறார்.   பாமக ஏதோ உன்னை மிரட்டுவது போலவும் அவர் பாமகவினரை கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையில் புகார் கொடுக்கிறார்.   இதெல்லாம் போகாத ஊருக்கு வழி சொல்லுகின்ற கதைதான்.  

அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விகளுக்கு திமிர்த்தனமாக பதில் சொல்லும் நீ,  முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன் பின்னால் ஒளிவது ஏன்? இப்படி மாற்றி வேலைகளைச் செய்யும் நீங்கள் நேரடியாக அரசியலுக்கு வாருங்கள் என்கிறார்.

பச்

மேலும்,   சூர்யாவும்  சூர்யாவின் குடும்பமும் யாரை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளும்.   அப்படிப்பட்ட நெகிழ்வு தன்மை உடைய குடும்பம்.  கலைஞர் கருணாநிதியை ஏற்றுக்கொள்ளும்,  அம்மையார் ஜெயலலிதாவையும் ஏற்றுக்கொள்ளும்,  திருமாவளவனை ஏற்றுக்கொள்ளும் , ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் நாளையே பாமகவினையும் ஏற்றுக்கொள்ளும்.   மொத்தத்தில் சூர்யா குடும்பத்திற்கு எந்த கொள்கையும் கிடையா. து நீங்கள் ஏன் பெரிய கொள்கைவாதிகள்  போல கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.