திமுக ஆட்சிக்கு எதிராக கடும் சீற்றம் -மகனுக்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்திய வைகோ

 
v

திமுகவுக்கும், திமுக அரசுக்கும் வைகோ தற்போது கண்டனம் தெரிவிக்க முடியாத நிலையில் இருந்தாலும்,  அவர் முன்னர் தெரிவித்திருந்த கடும் கண்டன வீடியோவை வெளியிட்டு, அவரது மகனுக்கு பெரிய சங்கடம் என்று தெரிவித்திருக்கிறார்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில்  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ களம் இறங்க வேண்டும்.  அவர் நாங்கள் நடத்திய பாஜக போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.   இதற்கு வைகோ கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார்.   முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் அகரம் தெரியாத அண்ணா மலைகள் என் பெயரை கூட உச்சரிக்க தகுதி இல்லை என்று கடுமையாக தெரிவித்திருந்தார் ஆனால் அதன் பின்னரும் அண்ணாமலை,   முல்லைப் பெரியாறு அணையை திமுக அரசு கேரளாவிற்கு தாரைவார்த்து அணையின் மதகுகளை கேரள அமைச்சர் திறந்தபோது தமிழக விவசாயிகள் துடித்துப் போனார்கள்.   அப்போது துயர்துடைக்க போராட  வைகோ வருவார் என்று விவசாயிகள் காத்திருந்தார்கள்.  

வ்வ்

 திமுகவின் அக்கறை இன்மையால் ஆளுமை குறைவால் உருவான பிரச்சனையை விவசாயிகளின் தவிப்பை அவர் கண்டுகொள்ளவே இல்லை.  தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஆதங்கப்பட்டார்கள்.    ஆளுங்கட்சிக்கு ஒத்து ஊதும் அரசியலுக்காக திமுக அரசுக்கு ஒற்றை கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.  முல்லைப் பெரியாறு பற்றி அகரம் தெரியாத அண்ணாமலை என் பெயரை உச்சரிக்க கூடாது என்று அறிவித்து உள்ளீர்கள் நன்றி.  ஆனால் அதன் சிகரம் தெரிந்தவர்கள் சீறியிருக்க  வேண்டாமா?  மக்கள் பிரச்சினைக்காக விவசாயிகளுக்காக நான் போராடும் போது அதை தள்ளி நின்று எள்ளி நகையாடுவது யாரை திருப்திப்படுத்த? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார்.

தற்போது திமுகவுக்கும், திமுக அரசுக்கும் வைகோ கண்டனம் தெரிவிக்க முடியாத நிலையில் இருந்தாலும்,  அவர் முன்னர் தெரிவித்திருந்த கடும் கண்டன வீடியோவை தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வெளியிட்டிருக்கிறார்.   அந்த வீடியோவில்,  ‘’முல்லைப்பெரியாறில் பச்சைத்துரோகம் செய்தார் கலைஞர்.  அன்றைக்கு இருந்த மத்திய அரசின் ஆதரவு வேண்டும்.   அதிலே கேரளாவில் ஆட்சி நடத்துகின்ற மார்க்சிஸ்ட் அச்சுதானந்தன் இடம்பெற்றுள்ளார் என்பதற்காக முல்லைப்பெரியாறு பிரச்சனையில் அவர் செய்த துரோகத்தை மன்னிக்கவே முடியாது.  

வா

எப்படி என்றால்,  ஒரு கட்டத்தில் 33 வாய்தாக்கள் வாங்கினார்.  கேரளா 33 வாய்தா வாங்கியது. ஆனால் ஒரு வாய்தா கூட தமிழ்நாடு வழக்கறிஞர் வாங்கவில்லை. கடைசியாக மூன்று நீதிபதிகள் சரியான தீர்ப்பை கொடுக்க இருந்தபோது இந்த வழக்கை அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றவேண்டும் என்று கேட்டவுடன்,  மத்தியான லஞ்ச் பிரேக் முடிந்து வாதாடுகிற  திமுக வழக்கறிஞர் பராசுரன், எழுத்து மூலமாக கொடுத்தார்.  லஞ்ச் பிரேக்கில் கலைஞரிடம் கேட்டுத்தான் அப்படி செய்தார்.  இந்த உலகத்தில் எந்த மாகாண முதலமைச்சரும் தன் மாநிலத்திற்கு இந்த பச்சைதுரோகத்தை செய்ய மாட்டார்.  ஜெயலலிதாவை நான் கடுமையாக எதிர்ப்பவன்.  நான் 8 ஆண்டுகள் முல்லைப்பெரியாறை காக்க வீதியில் போராடினேன்.  ஆனால், சட்டரீதியாக  சரியான நடவடிக்கை எடுத்து ஜெயலலிதா அதை பாதுகாத்தார்’’ என்று ஆவேசமாக பேசியிருக்கிறார் வைகோ.  

இந்த வீடியோவை பகிர்ந்த எஸ்.ஆர்.சேகர்,  ‘’பாவம் வைகோ.  இந்த வீடியோக்களை எல்லாம் தயவுசெய்து அழித்துவிடுங்கள்.  அவரது மகனுக்கு பெரிய சங்கடம்.’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

வைகோவுக்கு அடுத்தபடியாக மதிமுகவை வழிநடத்திச்செல்ல அவரது மகன் துரை வையாபுரி கட்சியின் முக்கிய பொறுப்பினை ஏற்றிருக்கிறார்.  அதனால்தான், அவரது மகனுகு பெரிய சங்கடம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.