ஸ்டாலினிடம் பேசிய அமித்ஷா

 
ச்

 முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் மு. க. ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.  அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க அனுமதி கேட்டபோது,  அவர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்.   இதனால்  அமித்ஷா-ஸ்டாலின் சந்திப்பு அப்போது நிகழவில்லை.   அதன்பின்னர் கடந்த 14ம் தேதி அன்று  திருப்பதியில் அமித்ஷா தலைமையில் நடந்த தென் மண்டல வளர்ச்சி கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் கலந்து கொள்வார் என்றும் இவரின் முதல் சந்திப்பு நிகழ்கிறது என்ற பேச்சு எழுந்தது.

 கடைசியில் வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட சென்றுவிட்டதால் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த கூட்டத்தை தவிர்த்தார்.  அவருக்கு பதிலாக அமைச்சர் பொன்முடி சென்றிருந்தார். 

ட்ப்

 இந்த நிலையில் மழை பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் நிதி கோரியிருக்கிறது.  இதுகுறித்து பேச தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை தொலைபேசியில் அழைத்து இருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.   இந்த தொலைபேசி உரையாடலின்போது தமிழகத்தில் பெய்த மழை வெள்ள பாதிப்பு குறித்து ஸ்டாலினிடம் கேட்டு அறிந்திருக்கிறார்.

 அப்போது வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய தமிழ்நாட்டிற்கு நிதியுதவி வழங்குமாறும்,  உடனடியாக முதற்கட்ட நிதியை விடுவிக்குமாறும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார்.   திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி. ஆர். பாலு முன்னதாக அமித்ஷாவை சந்தித்துள்ளார்.  அப்போது தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு கூறியிருக்கிறார்.   அதன்படி 2079 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யுமாறு  வலியுறுத்தியிருக்கிறார்.  முதற்கட்டமாக தமிழ்நாட்டிற்கு 550 கோடி ரூபாய் விடுவிக்குமாறு தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.   இதன் பின்னர் அது குறித்த விவரம் கேட்கவும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் அமித்ஷா.