காங்கிரஸ் எப்போதுமே பழங்குடியினரின் நலனை பற்றி பேசுகிறது.. ஆனால் எதையும் காங்கிரஸ் செய்யவில்லை… அமித் ஷா

 

காங்கிரஸ் எப்போதுமே பழங்குடியினரின் நலனை பற்றி பேசுகிறது.. ஆனால் எதையும் காங்கிரஸ் செய்யவில்லை… அமித் ஷா

காங்கிரஸ் எப்போதுமே பழங்குடியினரின் நலனை பற்றி பேசுகிறது. ஆனால் அவர்களின் நலன்களுக்காக எதையும் காங்கிரஸ் செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் பழங்குடியின் ஐகான்கள் மற்றும் முன்னாள் கோண்ட்வானா பேரரசர் சங்கர் ஷா மற்றும் அவரது மகன் ரகுநாத் ஷா ஆகியோரின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட கவுரவ் உத்சவ் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். அமித் ஷா பேசுகையில் கூறியதாவது:

காங்கிரஸ் எப்போதுமே பழங்குடியினரின் நலனை பற்றி பேசுகிறது.. ஆனால் எதையும் காங்கிரஸ் செய்யவில்லை… அமித் ஷா
கவுரவ் உத்சவ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித் ஷா

காங்கிரஸ் எப்போதுமே பழங்குடியினரின் நலனை பற்றி பேசுகிறது. ஆனால் அவர்களின் நலன்களுக்காக எதையும் காங்கிரஸ் செய்யவில்லை. பல்வேறு கட்சிகள் மற்றும் முகங்களை நிறுத்தி பழங்குடியினரின் வாக்குகளை பிரிப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் பா.ஜ.க. உத்தரவு கிடைத்ததும் (ஆட்சி) பழங்குடியினரின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. பழங்குடியினருக்கு வீடு மின்சாரம் உள்பட பல வசதிகளை பா.ஜ.க. வழங்கியுள்ளது. இந்த சமூகத்திற்காக வீட்டு குடிநீர் சப்ளையை இப்போது கொண்டு வர கட்சி (பா.ஜ.க.) முயற்சி செய்து வருகிறது. அதனால் அவர்கள் (பழங்குடியினர்) கவுரமான வாழ்க்கையை நடத்த முடியும்.

காங்கிரஸ் எப்போதுமே பழங்குடியினரின் நலனை பற்றி பேசுகிறது.. ஆனால் எதையும் காங்கிரஸ் செய்யவில்லை… அமித் ஷா
காங்கிரஸ்

பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2013-14ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பழங்குடியினருக்காக ரூ.4,200 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது பல்வேறு அமைச்சகங்களின்கீழ் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.71,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2013-14ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.21,500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது. பழங்குடியினருக்கான நலத்திட்டங்களின் கவரேஜ்ஜை 41 அமைச்சகங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மோடி அரசு 27 பழங்குடி ஆராய்ச்சி நிறுவனங்களை அமைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.