பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மூத்த சகோதரர் என்ற நவ்ஜோத் சிங் சித்து.. வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்ட பா.ஜ.க.

 
அல்லா எங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்காக நாங்கள் ஜிஹாத்தில் ஈடுபடுகிறோம்- மீண்டும் மிரட்டும் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை மூத்த சகோதரர் என்று நவ்ஜோத் சிங் சித்து கூறியதை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டு ராகுல், பிரியங்கா காந்தியை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமித் மால்வியா டிவிட்டரில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் அதிகாரியை கட்டிப்பிடித்து, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானை மூத்த சகோதரர் என்று கூறும் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்து இருந்தார். அந்த வீடியோவில், கர்தார்பூர் குருத்வாராவுக்கு நேற்று சென்ற பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் அதிகாரி ஒருவரை சந்திப்பதை காணலாம். 

அமித் மால்வியா

பாகிஸ்தான் அதிகாரி நவ்ஜோத் சிங் சித்துவை பிரதமர் இம்ரான் கான் சார்பாக வாழ்த்துகிறார், இந்த நாளுக்காக்தான் இத்தனை நாளாக காத்திருந்தோம் என்கிறார். அதற்கு நவ்ஜோத் சிங் நான் பெருமைபடுகிறேன். அவர் எனக்கு மூத்த சகோதரர். இதற்கு நான் தகுதியானவன் அல்ல, ஆனால் மிக்க நன்றி என்று சித்து கூறுவதை கேட்கலாம். 

நவ்ஜோத் சிங் சித்து

அமித் மால்வியா அந்த வீடியோவை டிவிட்டரில் பதிவேற்றம் செய்ததுடன், ராகுல் காந்தியின் விருப்பமான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை படா பாய் (மூத்த அண்ணன்) என்று அழைத்தார். கடந்த முறை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் பஜ்வாவை அவர் (நவ்ஜோத் சிங் சித்து) கட்டிப்பிடித்து பாராட்டுக்களை குவித்தார். காந்தி உடன் பிறப்புகள் (ராகுல், பிரியங்கா காந்தி) மூத்த தலைவர் அமரீந்தர் சிங்கை விட பாகிஸ்தானை நேசிக்கும் சித்துவை தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியம் உண்டா? என்று பதிவு செய்து இருந்தார்.