நான் பாட்டியாலாவில் போட்டியிடுவேன்.. சித்துவுக்கு பயந்து தொகுதியை விட்டு செல்ல மாட்டேன்.. கேப்டன் அமரீந்தர் சிங் உறுதி

 
கேப்டன் அமரீந்தர் சிங்

எதிர்வரும் பஞ்சா் சட்டப்பேரவை தேர்தலில் பாட்டியாலா தொகுதியில் போட்டியிடுவேன், சித்துவால் நான் அதை விட்டுவிடபோவதில்லை என்று கேப்டன் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

பஞ்சாபின் முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கேப்டன் அமரீந்தர் சிங் அரச பரம்பரை சேர்ந்தவர். கேப்டன் அமரீந்தர் சிங்கின் தந்தை சர் யாதவிந்தர் சிங் பாட்டியாலா சமஸ்தானத்தின் கடைசி மகாராஜா என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாட்டியாலா தொகுதி கேப்டன் அமரீந்தர் சிங் குடும்பத்தின் கோட்டையாக கருதப்படுகிறது.

நவ்ஜோத் சிங் சித்து

கேப்டன் அமரீந்தர் சிங் தொடர்ந்து 4 முறை பாட்டியாலா சட்டப்பேரவை தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரசில் இருந்தபோது அவருக்கும், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துக்கும் இடையே மோதல் நிலவியது. கடந்த ஏப்ரலில், பாட்டியாலா தொகுதியில் போட்டியிட தயாரா என்று நவ்ஜோத் சிங் சித்துக்கு  கேப்டன் அமரீந்தர் சிங் சவால் விடுத்தார். அண்மையில் காங்கிரசிலிருந்து வெளியேறி சொந்தமாக பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார்.

பா.ஜ.க.

இந்நிலையில் கேப்டன் அமரீந்தர் சிங் தனது பேஸ்புக் பக்கத்தில்,  நான் (எதிர்வரும் பஞ்சா் சட்டப்பேரவை தேர்தலில்) பாட்டியாலா தொகுதியில் போட்டியிடுவேன். 400 ஆண்டுகளாக பாட்டியாலா எங்களுடன் உள்ளது. சித்துவால் நான் அதை விட்டுவிடபோவதில்லை என்று தெரிவித்துள்ளார்.  பஞ்சாப் சட்டப்பேரவை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.