“சசிகலாவின் ஒற்றைத் தலைமையை ஏற்போம்” – அதிமுக பிரமுகர்கள் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்!

 

“சசிகலாவின் ஒற்றைத் தலைமையை ஏற்போம்” – அதிமுக பிரமுகர்கள் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்!

ராமநாதபுரத்தில் மீண்டும் அம்மா ஆட்சியை சின்னம்மா தலைமையில் அமைப்போம் என அதிமுக பிரமுகர்கள் போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறைக்கு சென்ற பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, மீண்டும் தனது பதவியை கைப்பற்ற சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல், ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடம் இருந்து அதிமுகவை கைப்பற்றி தனது தலைமையில் கட்சியை வழிநடத்த முயற்சித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, அதிமுக உறுப்பினர்களுடன் தொலைபேசியில் பேசி அதன் ஆடியோவை வெளியிடுகிறார்.

“சசிகலாவின் ஒற்றைத் தலைமையை ஏற்போம்” – அதிமுக பிரமுகர்கள் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்!

சசிகலாவின் இந்த முயற்சி அதிமுகவினர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது போலவே தெரிகிறது. சமீப காலமாக சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ்டர் ஒட்டுவதும் ஓபிஎஸ் – ஈபிஎஸ் நடத்தும் கூட்டங்களில் ஒற்றை தலைமை வேண்டுமென கோஷமிடுவதும் கட்சியின் உத்தரவை எதிர்த்து சசிகலாவுடன் பேசுவதும் சசிகலாவுக்கு ஆதரவு பெருகியிருப்பதை வெளிப்படையாக காட்டுகிறது. இருப்பினும், அதிமுகவினர் சசிகலா பக்கம் செல்லாத வண்ணம் ஓபிஎஸ் ஈபிஎஸ் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

“சசிகலாவின் ஒற்றைத் தலைமையை ஏற்போம்” – அதிமுக பிரமுகர்கள் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்!

இந்த நிலையில், ராமநாதபுரத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் இதயதெய்வம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியுடன் கழக பொதுச் செயலாளராக சின்னம்மா அவர்கள் ஒற்றை தலைமை ஏற்று மீண்டும் கழக பணியாற்றி அம்மா ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அரியாசனத்தில் அமர்த்த வருக வருக என வரவேற்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை அதிமுக நிர்வாகி முத்துராமலிங்கம் ஒட்டியுள்ளார்.