“சத்தியமா, நல்ல சாவே சாவமாட்டீங்க” பொதுமக்களுக்கு சாபம் விட்ட அதிமுக வேட்பாளர்!!

“சத்தியமா, நல்ல சாவே சாவமாட்டீங்க” பொதுமக்களுக்கு சாபம் விட்ட அதிமுக வேட்பாளர்!!

அதிமுகவுக்கு ஒட்டு போடவில்லை என்றால் நல்ல சாவே வராது என்று அதிமுக வேட்பாளர் ஒருவர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“சத்தியமா, நல்ல சாவே சாவமாட்டீங்க” பொதுமக்களுக்கு சாபம் விட்ட அதிமுக வேட்பாளர்!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக, அதிமுக கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதிமுகவில் பாமக, பாஜக , தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியில் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுக மீண்டும் வெற்றிபெற தீவிரமாக உழைத்து வருகிறது. அதேபோல் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது.

“சத்தியமா, நல்ல சாவே சாவமாட்டீங்க” பொதுமக்களுக்கு சாபம் விட்ட அதிமுக வேட்பாளர்!!

இந்நிலையில் நாமக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் கே.பி.பி. பாஸ்கர். இவர் அந்த தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது பொதுமக்கள் மத்தியில் ஓட்டு கேட்டார். அப்போது பேசிய அவர், நீங்க இரட்டை இலைக்கு ஓட்டு போடலன்னா சத்தியமா, நல்ல சாவே சாவமாட்டீங்க. இத்தனை திட்டங்களை செய்துள்ளோம். நன்றி கெட்ட மக்களாக இருக்காதீர்கள். நன்றி கெட்ட தொகுதியா நாமக்கல் தொகுதியை மாற்றி விடாதீர்கள்” என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

“சத்தியமா, நல்ல சாவே சாவமாட்டீங்க” பொதுமக்களுக்கு சாபம் விட்ட அதிமுக வேட்பாளர்!!

இதுவரை அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகள் மாறிமாறி வெற்றி பெற்று வந்த தொகுதி நாமக்கல். இதுவரை அதிமுக 6 , காங்கிரஸ் 5 மற்றும் திமுக 4 முறையும் நாமக்கல் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது