அதிமுகவினரை வெளியேற்றுங்கள்…அதிரடி காட்டிய சபாநாயகர்; பாஜக, பாமகவும் வெளிநடப்பு!

 

அதிமுகவினரை வெளியேற்றுங்கள்…அதிரடி காட்டிய சபாநாயகர்; பாஜக, பாமகவும் வெளிநடப்பு!

திமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மீதான விவாதம் கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. விவாதத்திற்காக இன்று காலையும் அவைக் கூடிய நிலையில் கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக அதிமுகவினர் பதாகைகளுடன் சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் அவர்களை எச்சரித்தார்.

அதிமுகவினரை வெளியேற்றுங்கள்…அதிரடி காட்டிய சபாநாயகர்; பாஜக, பாமகவும் வெளிநடப்பு!

சபாநாயகரின் அறிவுறுத்தல்களையும் மீறி அவர்கள் பதாகைகளை ஏந்தியபடி தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வந்தனர். இதனால் , அதிமுக எம்எல்ஏக்களை சபையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். எதிர்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் பேச அனுமதி கொடுத்தேன். ஆனால் அனுமதி இல்லாமல் பதாகைகளை ஏந்தி வந்து இருப்பது கண்டிக்கத்தக்கது என சபாநாயகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சபாநாயகரின் உத்தரவுபடி அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக, அதிமுக கூட்டணி கட்சிகளான பாமக மற்றும் பாஜக எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். பேரவையில் இருந்து வெளியே சென்ற அதிமுகவினர் சட்டப்பேரவையின் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பொய் வழக்குப் போடும் திமுக அரசை கண்டிக்கிறோம் என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.