ஆடியோ லீக்- எடப்பாடி ரியாக்‌ஷன் என்ன? அறைக்குள் என்ன நடந்தது? பொன்னையன் பரபரப்பு

 
ed

அதிமுகவின் மூத்த தலைவர் கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன்,  ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பனிடம் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, எஸ்.பி வேலுமணி, கே பி முனுசாமி, சிவி சண்முகம் உள்ளிட்ட பலரின் ரகசியங்கள் அம்பலப் படுத்தப்பட்டிருந்தது.  இதனால் எடப்பாடி ஆதரவாளர்களை ஆட்டம் காண வைத்தது.

திமுக மூத்த தலைவர் துரைமுருகன் கூட, பொன்னையன் முன்ன மாதிரி இல்ல..அவர் இப்ப வேற மாதிரி என்று கமெண்ட் அடித்தார்.  ஆனால் அந்த ஆடியோவில் பேசியிருப்பது தான் அல்ல அது மிமிக்ரி என்று பொன்னையன் விளக்கம் அளித்து இருந்தார்.   இதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமியை பொன்னையன் நேரிலும் சென்று சந்தித்து பேசி வந்தார்.  

po

 ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்களோ,  அது பொன்னையன் பேசிய ஆடியோ தான்.    பொன்னையும் பேசிய ஆடியோ தான் என்பதற்கான ஆதாரம் இருக்கிறது.   அப்படி இல்லை என்றால் அவர் வழக்கு போட வேண்டியதானே.   அவர் வேண்டுமென்றே ஓபிஎஸ் ஓபிஎஸ் தரப்புக்கும் இந்த விஷயங்கள் தெரிய வேண்டும் என்றுதான் அவ்வாறு ஆடியோவில் பேசினார் என்று சொல்லி வருகின்றனர்.  

 இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் இந்த ஆடியோ லீக் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் பொன்னையன்.   அந்த நேர்காணலில் அது பொன்னையன் பேசிய ஆடியோ தான் என்பதை அவர் வாயாலேயே வர வைக்க வேண்டும் என்று நெறியாளர் எவ்வளவோ முயற்சிக்கிறார்.  வேறு எதையோ  பேசிக்கொண்டு இருக்கும்போது இடையிடையே இது நீங்கள் தானே பேசியது என்று கேட்கிறார்.   ஆனால் பொன்னையும் ரொம்ப நிதானமாக தெளிவாக அந்த ஆடியோ தான்  பேசியது இல்லை என மறுக்கிறார்.

 அந்த ஆடியோ வெளியானதும் முனுசாமி, வேலுமணி என்ன சொன்னார்கள் என கேட்க,  ‘’ அந்த ஆடியோ பொய் என்பதற்கு அதில் உள்ள கண்டன்ட் எல்லாமே பொய். இதுதான் அந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது என்பதற்கு முக்கிய காரணம் .  எடப்பாடி பக்கம் எம்எல்ஏக்களே இல்லை எல்லாமே தங்கமணி,  வேலுமணி வசம் இருக்கிறது. முனுசாமி பற்றிய தவறாக சொல்லப்பட்டிருக்கிறது.  அவர் உழைத்து முன்னேறியவர் . மக்களுக்கு நன்மை செய்யக்கூடியவர் இதற்கெல்லாம் நேர்மாறாக அந்த ஆடியோவில் சொல்லப்பட்டிருக்கிறது.   அதனால் தான் அந்த ஆடியோ பொய் என்று சொல்கிறேன்’’

p

 அந்த ஆடியோ நீங்கள் பேசவில்லை என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது . இதை எடப்பாடி எப்படி நம்பினார்கள் என்று கேட்க ,  ‘’அந்த ஆடியோவில் நான் எல்லோரையும் அவன் இவன் என்று சொல்லி பேசுவதாக இருக்கிறது.  பண்பாடு இல்லாமல் பேசுவதாக இருக்கிறது. ஆனால் நான் அப்படி பேசுபவன் அல்ல.  அதனால்தான் அது நான் அல்ல என்பதை எடப்பாடி தர பழனிச்சாமி உணர்ந்திருக்கிறார்.  அதனால்தான் எதிரிகளால் புனையப்பட்ட மிமிக்ரி பேஸ் போலி ஆடியோ என்று எடப்பாடி பழனிச்சாமியே சொன்னார் ’’ என்றார்.

சரி, இப்படி ஒரு ஆடியோவை ஏன் ரிலீஸ் செய்ய வேண்டும்? என்று கேட்க,  ‘’கட்சியில் ஒரு மூத்த தலைவர் சொன்னது போல் சொன்னால் மக்கள் நம்பி விடுவார்கள் என்று செய்திருக்கிறார்கள்.   இபிஎஸ், தங்கமணி வேலுமணி ,கே பி முனுசாமி ஆகியோரின் செல்வாக்கு மக்கள் மத்தியிலே குறைய வேண்டும்.  அவர்கள் செல்வாக்கை இழந்து நிற்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டு செய்த சதி தான் இது’’ என்கிறார் பொன்னையன்.