’’பொய் சொன்னா அறைவேன் என்று சொன்ன நடிகர் சித்தார்த் எங்கே?’’

 

’’பொய் சொன்னா அறைவேன் என்று சொன்ன நடிகர் சித்தார்த் எங்கே?’’

16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியது. புதிய ஆசி பொறுப்பேற்ற பின்னர் நடைபெறம் இந்த முதல் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையில் இடம்பெற்றிருப்பது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

’’பொய் சொன்னா அறைவேன் என்று சொன்ன நடிகர் சித்தார்த் எங்கே?’’

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்கிற திமுக தேர்தல் வாக்குறுதி தொடர்பான அறிவிப்பும் எதுவும் இல்லை. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்று கூறியதும் நிறைவேற்றப்படவில்லை. கூட்டுறவு வங்கிகளில் ரத்து செய்யப்பட்ட கடன்களுக்கு ரசீது வழங்கப்படவில்லை என்று சொன்ன எதிர்க்கட்சிதலைவர் எடப்பாடிபழனிச்சாமி, தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்கு பின்பு ஒரு பேச்சு என்று திமுக செயல்படுகிறது என்று விமர்சித்துள்ளார்.

’’பொய் சொன்னா அறைவேன் என்று சொன்ன நடிகர் சித்தார்த் எங்கே?’’

பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் பட்டிருந்தது. ஆனால் இது குறித்து எந்த தகவலும் ஆளுநர் உரையில் குறிப்பிடப் படவில்லை.

’’பொய் சொன்னா அறைவேன் என்று சொன்ன நடிகர் சித்தார்த் எங்கே?’’

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குகின்ற திட்டம், நியாய விலை கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக தரப்படும் என்கிற திட்டம், உளுத்தம்பருப்பை மீண்டும் வழங்கும் திட்டம், 60 வயதுக்கு மேற்பட்டோர் உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்கிற திட்டம், கூட்டுறவு வங்கிகளில் ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி திட்டம், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொன்ன இத்தனையும் ஆளுநர் உரையில் இடம்பெறாதது மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்கிறார் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம்.

’’பொய் சொன்னா அறைவேன் என்று சொன்ன நடிகர் சித்தார்த் எங்கே?’’

டுவிட்டர் மாரிதாஸும் ஆளுநர் உரைகுறித்து விமர்சனம் செய்துள்ளார். அவர், ‘’நீட், பெட்ரோல் விலை குறைப்போம் ஆரம்பித்து மகளிருக்கு 1000 ரூபாய் தருவேன் எனச் சொன்னது வரை திமுக வாக்குறுதி மொத்தமும் பொய்? கொரோனா இறந்தவர்கள் எண்ணிக்கையில் கூட பொய் கணக்குக் காட்டி மக்களை ஏமாற்றுகிறது இந்த திமுக அரசு.’’ என்று சொல்லி, ‘’பொய் சொன்னா அறைவேன் என்று சொன்ன நடிகர் சித்தார்த் எங்கே?’’ என்று கேட்கிறார்.

ஒழுக்கமான மனிதராக இருந்தாலும் அல்லது துறவியாக இருந்தாலும் அல்லது தலைவராக இருந்தாலும், யாராக இருந்தாலும் பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி ஒரு அறை விழும் என்று சொல்லி இருந்தார் நடிகர் சித்தார்த். உ.பியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்ததற்கு இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.