”இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது?”

 

”இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது?”

வ்வளவு பணம் எப்படி கிடைத்தது? ஆனால், பாஜக ஊழலில்லா ஆட்சி நடத்துகிறது.. என்று மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக சாடியிருக்கிறது.

பாஜக பிரமுகர்கள், பாஜக ஆதரவாளர்கள் ஒன்று கூடி டுவிட்டர் ஸ்பேசஸ் தளத்தில் ஒரு கலந்துரையாடல் நடத்தினர். இதில் பாஜகவின் தோல்வி, தேர்தலில் செலவு செய்த தொகை உட்ப பலருடன் பேசினர். ஒரு க்ளோஸ் சர்க்கிள்தான் என்று இதில் எஸ்.வி.சேகர் பேசியது லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

”இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது?”

எஸ்.வி.சேகர் தனது பேச்சில், நடந்த சட்டன்ற தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் 13 கோடி ரூபாய் கொடுத்திருக்காங்க என்று தான் கேள்விப்பட்டதாக தெரிவித்திருந்தார். அவர் மேலும், தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், தோல்வி அடைந்தவர்களும் கட்சிக்கு முறையாக கணக்கு கொடுத்திருக்கிறார்களா? கொடுக்க வேண்டும் இல்லையா?என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 30 லட்சத்து 80 ஆயிரம் வரைக்கும் செலவு செய்யலாம். அதற்கு மேல் செலவு செய்தால் அது தேர்தல் விதிமீறல் ஆகும். ஆனால், பாஜக வேட்பாளர்களுக்கு தலா 13 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருப்பதாக சேகர் சொல்வது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

”இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது?”

’’ஒரு தொகுதிக்கு ரூ 13 கோடி என 20 தொகுதிகளுக்கு ரூ.260 கோடி செலவு செய்ததாம் பாஜக! அந்த கட்சி பிரமுகர் எஸ். வி. சேகர்சொல்கிறார்! இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது? ஆனால் பாஜக ஊழலில்லா ஆட்சி நடத்துகிறது!’’ என்று தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன். அவர் மேலும், ’’தமிழகத்தில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 260 கோடி கருப்பு பணத்தை செலவிட்டுள்ளதா? 5 மாநில தேர்தலில் பாஜக போட்டியிட்ட இடங்களைக் கணக்கில் கொண்டால் எத்தனை நூறு கோடிகள் செலவிடப்பட்டது’’என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.